Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[28 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26515
துபாய் ரிடர்ன் மாப்பிள்ளைக்கு பொய் கால் குதிரையா, நிஜ குதிரையில் வந்தால் துணிக்கு கூட காசு மிஞ்சாது...இது TRACTOR EMULSION PAINT விளம்பரம், புதிய தலைமுறை டிவி பார்பவர்களுக்கு தெரியும்.
நாங்கள் ஒரு காலத்தில் வேலை தேடி அலையும்போது துபாய்க்கு போகாதீர்கள், அங்கு சம்பாதிக்கும் பணம் அங்கேயே செலவாகி விடும். ஒரு பைசா கூட சேமிக்க முடியாது என்று பயங்காட்டியே அங்கே போக விடாமல் செய்து விட்டார்கள். ஆனால் அங்கு சமீப காலத்தில் சுற்றுலா சென்று வந்த பிறகுதான் தெரிந்தது வாழ்க்கையின் ரம்மியமான வசந்த காலங்களை தொலைத்துவிட்டோம் என்று.
வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் குறிப்பாக காயலர்கள் சந்தோசமாக உல்லாசமாக குடும்பத்துடன், நல்ல தொழில் வளத்துடன், பொழுது போக்குடன், இறை பக்தியுடன், ஊர் மக்களுக்கு உதவும் விரிந்த உள்ளத்துடன், சகல சௌபாக்கியங்களுடன் சிறப்பாக வாழ்கிறார்கள். அதே சமயம் நல்ல சேமிப்புடன் ஊரில் சொத்து சுகங்களும் காணி பூமிகளும் வாங்கி வீடுகளும் தங்கள் தேவைக்கும் சிலர் சற்று ஆடம்பரமாகவும் கட்டி, மக்களுக்கு நல்ல செழிப்பான சம்பந்தங்களும் செய்து வாழ் வாங்கு வாழ்கிறார்கள் அல்ஹம்து லில்லாஹ்.
அந்த நாள் ஞாபகம் வருகிறது. ஆனாலும் நமது சந்ததிகள் அந்த தவறான அணுகுமுறைகளை முன்னுதாரணமாக கொள்ளாமல், நல்ல கல்வியும் நாணயமும் நன்னடத்தையும், இறை நம்பிக்கையுடன் இணைந்த தன்னம்பிக்கையும் இருந்தால், எந்த நாட்டிலும் வாழலாம்.
வானத்தில் பறப்பதும் பூமியில் நடப்பதும் அவரவர் எண்ணங்களே, எண்ணம் போல் வாழ்வு என்ற வாழ்வியல் தத்துவத்தை நன்கு விளங்கி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் துபாய் வாழ் காயலர்கள். இந்த சிறப்பான காயல் தின விழாவில் கலந்து கொள்ளும் எல்லோருக்கும் எனது நல் வாழ்த்துக்கள்.
செப்பு மொழி பதினர்று உடையாள் எனினும் சிந்தை ஒன்றுடையாள் என்று நம் தாய் திரு நாட்டை போற்றுவார்கள். அதே போல் ஒரு தாய் பெற்றால் அவள் வயிறு தாங்காது என்று பல தாய்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நீங்கள்.... எல்லோரும் சகோதர வாஞ்சையுடன், தெரு முஹல்லாஹ் என்ற பாகுபாடின்றி இன்றுபோல் என்றும் எங்கும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.KULLU AAM VA ANTHUM BI KHAIR
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross