தன் வினை தன்னயேச் சுடும்...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[18 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26922
கட்டுரையாளர் ஷாஜஹான் துரை அவர்கள் காலப்போக்கில் வடுவாக மாறி ஆறிய காயத்தை தமது கூரிய பேனா முனையால் குத்திக் கீறியுள்ளார். வலி இன்னும் அதிகமாகவே உள்ளது.
விடுதலைப்புலிகள் தனி ஈழத்திற்காக போரடியவர்கள். தமது இனத்தின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள். கொத்துக் கொத்தாக மனித உயிர்களை காவு வாங்கிய சிங்கள அரசும், தன் தகப்பன் (பிரதமர்) சிதைக்கப்பட்டார் என்பதால் ஒரு இனத்தையே கருவறுக்க துணை போன இந்திய ரானுவமும் கைகோர்த்து தொண்டைக் குழியில் கடைசி மூச்சு உள்ளவரை தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர். சொந்த நாட்டிலேயே இன்று வரை அகதிகளாக வாழ்வுரிமை மறுக்கப்பட்டு முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள். இவர்களுக்காக குரல் கொடுக்க ஏராளமான அமைப்புக்கள், மாணவர்களின் போராட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம், என தமிழ்நாடே கொந்தளிக்கும் நிலை!
அன்று யாழ் வாழ் இஸ்லாமியர்கள் தங்கள் போராட்டத்திற்கு சாதகமாக இல்லை எனும் காரனத்தால் துரத்தப்பட்ட அந்த நிமிடங்களை எண்ணிப்பாருங்கள்.
பாலகர், வயோதிகர், கர்பிணிப் பெண்டிர், இப்படி ஒட்டுமொத்தமாக ஒர் ஊரையே காலி பண்ண வைத்த புலிகளின் அட்டூழியம். கொல்லப்பட்ட இஸ்லாமிய தனவந்தர்கள், ஜாலியன் வாலபாக் போன்ற இனப்படுகொலைகள் இறைவனை வணங்கிக் கொண்டிருந்த இலங்கையின் அப்பாவி முஸ்லிம்கள் மீது ஈவு இரக்கமின்றி தயவு தாட்சண்யமின்றி காடுமிராண்டித்தனமாக கட்டழித்துவிடப்பட்டு, திரும்பிய திசையெல்லாம் கொலை வெறிப்புலிகள் கொன்று குவித்த இஸ்லாமியர்களின் சடங்கள், இரத்த வெள்ளத்தில் மிதந்த பச்சைக்குழந்தைகளின் பூவுடல்கள், சாயப்பட்டறையின் கழிவு போல காத்தாங்குடி பள்ளி வாயிலில் கறைபுரண்டோடிய இரத்தக் கறைகள், தம் சமுதாயத்தினருக்காக அங்குள்ளவர்கள் சவக்குழிகள் வெட்டும்போது கூட தமது கண்ணிர் துளிகள் அவர்களின் வியர்வைத் துளிகளையும் மிஞ்சியதே? இப்படி என் சமுதாய மக்களை புலிகள் கருவறுத்தபோது எங்கே போயிற்று இந்த ஊடகத்தின் பூதக் கண்கள்? ஏன் பதியவில்லை நம் இந்திய இரானுவத்தின் கருணைப் பார்வை? ஏன் வீதிக்கு வர மறுத்தன? தமிழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள்? ஏன் ஓங்கி ஒலிக்க மறந்தன நம் அரசியல் தலைவர்களின் ஆதங்கக் குரல்கள்?
இன்று இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை சரி எனச் சொல்ல வரவில்லை! அதே நேரம் அன்று புலிகளின் ஆணவத்தால் உருக்குலைந்து போன என் சமுதாய மக்களுக்கு இந்த உலகம் செய்த கைமாறுதான் என்ன? இன்று இத்தகைய கொடுமைகளுக்கு உள்ளான தமிழர்களின் அவல நிலைக்கு ஒட்டுமொத்த காரணமும் புலிகளே! புலிகளே! புலிகளே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross