சில மாற்றங்கள் தேவை posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[17 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2699
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
" உடல் நலன் ஆய்வு " பற்றிய செய்தி சேகரிப்பு முகாம் தொடங்கி விட்டது , அறிய மகிழ்ச்சி.
மேலும் , " அடுத்தடுத்த முகாம்களை, பள்ளிவாசல்கள், பெண்கள் தைக்காக்கள், பொது நல அமைப்புகளின் வளாகங்கள், பள்ளி - கல்லூரிகள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தவுள்ளதாகவும் " இருப்பது நன்மையைத்தரும் என்பதில் சந்தேகமில்லை.
--------------------------------------------
பொது மக்களிடமிருந்து சேகரிக்கும் விவரங்கள் மிகவும் முக்கியமானவை, பயனளிக்கக்கூடியவை.
அப்படிப்பட்ட விவரங்களை சேகரிக்கும்போது கூடுமானவரை மிக சரியான தகவல்களை பெறவேண்டும் .
சரியான தகவல்களை வைத்து " ஆய்வு " செய்தால்தான் நல்லதொரு முடிவு கிடைக்கும்.
ஆகையால் செய்தி சேகரிக்கும் முறைகளில் சில மாற்றங்கள் தேவை.
1. ஒவ்வொருவரிடமும் ஏன், எதற்காக இந்த ஆய்வு எடுக்கப்படுகிறது என்பதை தனித்தனியாக சொல்லி விளக்கிய பின்பே இந்த செய்தி சேகரிப்பை தொடங்க வேண்டும்.
இதனால் இரண்டு, மூன்று நிமிடங்கள் அதிக செலவாகும் என்பது உண்மையே. ஆனால் கூடுமான வரை சரியான தகவல்கள் கிடைக்கும்.
2. படிவங்களை பூர்த்தி செய்யும்போது ஒவ்வொருவரையும் தனித்தனியாக வைத்தே பூர்த்தி செய்ய வேண்டும் அப்பொழுதுதான் கூடிய மட்டும் சரியான தகவலை பெறமுடியும். பிறருக்கு முன்பு சில விசயங்களை சொல்வதற்கு தடுமாற்றங்கள் ஏற்படலாம், கூச்சம் உண்டாகலாம் அல்லது விருப்பமில்லாமலும் போகலாம்.
--------------------------------------------
ஆகவே செய்தி சேகரிப்பு விசயத்தில் சில, சில மாற்றங்களை செய்வதால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படலாம், நேரங்கள் அதிகம் செலவாகலாம் மற்றும் சில அசௌகரியங்களும் உண்டாகலாம்.
ஆனால் முறையான , கூடியமட்டும் சரியான தகவல்கள் கிடைக்கும். அதன்மூலம் நம்முடைய எண்ணங்கள் நிறைவேறும்.
அதனால் சில மாற்றங்களுடன் செய்தியை சேகரியுங்கள் - வல்ல அல்லாஹ் வெற்றியைத் தருவான் ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross