நம் மக்களுக்கு நமது நகராட்சியில் வேலை இல்லை... மிக பெரிய வருத்தமே...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[23 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27556
டிசம்பர் 31, 2012 முடிய வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த 81.8 லட்சம் பேர் வேலைவாய்ப்பு எதிர்பார்த்துள்ளனர். அதில் சுமார் 3.75 லட்சம் பேர் முஸ்லிம்கள். என்று மக்கள் செய்தி தொடர்புத்துறை சென்னை தலைமைச் செயலகத்தின் இயக்குநர் தரும் தகவலை பொது மக்களுக்கு தரும் அட்மின் அவர்களே..!
நமது காயல்பட்டினத்தின் நகராட்சியில் எத்தனை காலி பணியிடங்கள் உள்ளன என்ற தகவலை இங்குள்ள ஆணையரிடமோ அல்லது பொது தகவல் அதிகாரி மூலமோ தகவல் பெற்று மக்களின் கவனத்திற்கு தரலாமே...?
இன்று நமது நகரில் படித்து பட்டம் பெற்று அரசு பணியில் (நமது நகராட்சியில்) பணி செய்ய பல ஆண்கள் - பெண்கள் மிக மிக ஆவலாக வேலைக்காக காத்துள்ளனர் என்பது குரிப்பிடதக்குது..!
தற்போது காயல்பட்டினத்தின் நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களாக ரோஜா குழுவின் மூலம் பணி புரிந்து வரும் நபர்கள் குறைந்தது 11 பேராக இருக்க கூடும் இவர்களில் ஒருவர் கூட முறைப்படி அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் உத்தரவுபடி பணியில் அமரவில்லை என கேள்வி படுகிறேன்..!
அன்பார்ந்த நகரமன்ற உறுப்பினர்களே..! இந்த மாத நகரமன்ற கூட்டத்தில் இந்த வேலைவாய்ப்பு விசியத்தில் கொஞ்சம் ஆணையரை குறிக்கிட்டு ரோஜா குழுவின் மூலம் நகர்மன்றத்தில் பணி புரிந்து வரும் நபர்கள் குறித்த தகவலை பெற்று முறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிந்து காத்திருக்கும் நமது நகரின் ஆண்கள் - பெண்கள் இவர்களின் துயரங்களை களைய (பணியில் அமர்த்த) முயற்சிகள் எடுப்பீர்களாக...!
இக்கூட்டத்தில் அணைத்து உறுப்பினர்களும் ஓன்று சேர்ந்து ஒருமித்த குரலை நமது நகர் பட்டதாரிகளுக்காக ஒலிப்பீர்களாக...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross