வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்காரியங்களை ஏற்றுக்கொண்டு மகத்தான வெற்றியைத் தந்தருள்வானாக..... posted byS.K.Shameemul Islam (Chennai)[12 July 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 28594
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஷைத்தானை விளங்கிட்டு நரகத்தை இழுத்துப் பூட்டி சுவனத்தின் வாயில்களை விசாலமாகத் திறந்து ரமலானை நமக்கு வழங்கிய வல்ல நாயன் தன் அடியார்களில் நல்லவர் ஒருவரையும் தன்னகத்தே அதுவும் ஒரு ஜுமுஆ நாளின் முந்தைய இரவில் அழைத்துக் கொண்டான்.
நேரத்தை வீணடிப்பதென்றால் இவர்களுக்கு என்னவென்றே தெரியாது. சிரிக்கும் சிரிப்பிலும் ஒரு கண்ணியம் இருக்கும்.
மார்க்க அடிப்படைகளைப் பேணுவதில் மிகவும் சிறப்பானவர்கள்.
குர்ஆனோடு என்றென்றைக்குமே தன்னை ஓர் அங்கமாக்கிக் கொண்டவர்கள் எனக் கூறுவதில் மிகை இல்லை.
சென்னையில் மாதவரத்தில் பல காலம் கழித்த போது அங்கும் அதே பேணுதலுடன்தான் இருந்தார்கள்.
இவர்களின் ஒரு சொல்லுக்கு எங்கள் சொளுக்கார் வெட்டையே கட்டுப்பட்டு நிற்கும். ஏன் தெருவும் முஹல்லாவும் கூட அப்படித்தான்.
கடைசியாக சிறிது காலம் நோய் வயப்பட்ட எங்கள் பாசமிகு மாமா -சுல்தான் அப்துல் காதிர்- உங்களின் பிரிவு எங்களை எல்லாம் விவரிக்க முடியாத துக்கத்தில் விட்டுச்சென்றுள்ளது.
அண்மையில் நான் ஊருக்கு வந்த நேரம் உங்கள் சுகவீனத்தை கேள்விப்பட்டு உருக்குலைந்த எனக்கு, எப்போதும் சிரிப்பிலேயே பார்த்த உங்களின் முகத்தை பார்க்க முடியாமல் என் உள்ளம் என்னை தடுத்து விட்டது. பிரிவால் வாடும் குடும்பத்தில் என்னையும் ஒருவராக சேர்த்துக்கொண்டு ஆறுதல் கூறுங்கள்.
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்காரியங்களை ஏற்றுக்கொண்டு பிழைகளைப் பொறுத்து கேள்வி கணக்குகளை இலேசாக்கி கப்ரின் வாழ்விலும் மறுமை வாழ்விலும் மகத்தான வெற்றியைத் தந்தருள்வானாக.
உயர்ந்த சுவனச் சோலையாகிய ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அவைகளை நபிமார்கள், ஷுஹதாக்கள், சாலிஹீன்களோடு அவர்களை ஒன்றாக்கி வைப்பானாக.
துயருற்றிருக்கும் குடும்பத்தவர் அனைவருக்கும் நண்பன் யஹ்யா, தம்பி அபூதாஹிர் மற்றும் யாவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் &
குடும்பத்தினர்கள்.
எஸ்.கே.எஸ்.ஹவுஸ்.
காயல்பட்டணம் & சென்னை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross