எனது பாசத்திற்குரிய அருமை அல்ஹாஜ் சுல்தான் அப்துல் காதிர் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப பொறுமை செய்து கொண்டேன்.
அவர்களின் இழப்பு நமது முஹல்லாவிர்க்கும், சுன்னத் வல் ஜமாஅத் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
பழைய செய்திகளை ஞாபகம் வைத்து அதனை அப்படியே நிதர்சனமாக சொல்வதில் மிகவும் திறமையானவர்கள்.
நான் ஊர் வரும்போதும், திரும்பி செல்லும்போதும் அவர்களை சந்திக்க தவறமாட்டேன். சந்திக்கும் போதெல்லாம் எதாவது ஒரு சப்ஜெக்ட் ஒன்றை ஆரம்பித்து இறுதி வரை அதனை மிகவும் சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள், கேட்கும் எனக்கு சில சமயம் சோர்வு ஏற்படுமே அன்றி, சொல்வதில் அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
நமது முஹல்லாவில் பிற இடங்களில் நடைபெறும் நிகழ்சிகளில் சரியான நேரத்துக்கு ஆஜராகுவதில் எனக்கு தெரிந்த வரை அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் ஆவார்கள்.
புனித மஜ்லிஸ் புகாரிஸ் ஷரீபில் ஒரு முறை பிறை 18 அன்று அண்ணல் நபி (ஸல் ) அவர்களின் "வபாத்" சம்பந்தமாக அன்றைய பாடங்கள் எனக்கு பயான் செய்யும் வாய்ப்பு அமைந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பே என்னை
அழைத்து, “வாப்பா! வபாத் செய்தியிலோ, கடைசி வரை சரியாக பேசனுமம்மா!” என்று சில யோசனைகளை சொன்னார்கள்! அன்று அவர்கள் மஜ்ளிசின் சபையில் இருந்தார்கள். பயானின் துவக்கத்திலேயே "ஹம்ஜியாவின்" ஒரு சில பைத்தை படிக்கும்போது என்னை அறியாமல் அழுகை வந்தது. சபையில் இருந்த அவர்கள், தாங்களும் கண் கலங்கியவர்களாக, “ஆஹா! இப்போதே அழுகிறானே, இன்னும் நிறைய இருக்கிறதே” என அருகில் இருந்தவர்களிடம் சொன்னதாக பிறகு தெரிந்து கொண்டேன்.
பழைய கால செய்திகள், இலங்கை மட்டக்களப்பு செய்திகள், சொளுக்கார் கம்பெனி செய்திகள், நஹ்வி அப்பா, கொம்பு ஆலிம்சா, கண்ணாடி ஆலிம்சா போன்ற செய்திகளை எல்லாம் மிகவும் அழகாக சொல்வார்கள். நேரடியாக பார்ப்பது போன்று கேட்கும் நமக்கு தோன்றும்.
அந்நேரத்தில் எல்லாம் இந்த செய்திகளை எல்லாம் "வாய்ஸ் ரிகார்டிங் " செய்ய வேண்டும் என்று நினைத்து பலமுறை அது முடியாமல் போய்விட்டது.
எப்போதும் ஒரு பொருள் அதை இழக்கும் போதுதான் அதன் அருமை நமக்கு தெரியும். இப்போது எழுதி என்ன பயன் என நினைக்கிறேன்!
எனது தாயாரோடு மிகவும் தமாசாக பேசுவார்கள் . தாயாரும் பதிலுக்கு தமாசாக பேசுவார்கள்.
ஒருமுறை நான் சிறுவனாக இருத்த போது கை, காலில் சிரங்கு வந்து, ஒன்றுக்கும் ஆறாமல் வீடு வந்த போது அதனை பார்த்து மிகவும் கவலைப்பட்டு மறுநாள் லைபாய் சோப்பு வாங்கி வந்து பாத்ரூம் கதவை தாளிட்டு என் மேனி முழுதும் அவர்களின் முபாரக்கான கையாலேயே தண்ணீர் ஊற்றி, சோப்பும் போட்டு விட்டார்கள். சில நாட்களில் மாஷாஅல்லாஹ் சிரங்கு அனைத்தும் ஆறிவிட்டது.
நான் பள்ளி பருவத்தில் இருந்தபோது நமது குடும்பத்தில் சிலர்கள் "மௌலித்" நிகழ்ச்சிக்கு அவர்களை அழைப்பார்கள். அப்போது கூடவே என்னையும் அந்த மஜ்ளிசுக்கு அழைப்பார்கள். காரணம் அப்போது "மர்ஹூம் நஹ்வி சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்கள் "இமாம் பூசிரி நாயகம் (ரஹ்) அவர்களின் மீது கோர்வை செய்த "ஆதி முஹம்மத் முஸ்தபா நபி மேல்" எனும் பாடலை என்னை பாடத் செய்து ரசிப்பார்கள்.
இவைகளெல்லாம் மலரும் நினைவுகள் "அத்தகைய ஒரு 'சீதேவியை" இழந்து தவிர்க்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் , குறிப்பாக அருமை தம்பிமார்களான யஹ்யா முஹ்யிதீன் , செய்யித் அபூ தாகிர் ஆலிம் மஹ்லரி மற்றும் உற்றார் ,உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் அல்லாஹ் சப்ர் எனும் பொறுமையை தந்தருளி , அழகிய நற்கூலியையும் வழங்கிடுவானாக !
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், பிழைகள் யாவையும் மன்னித்து கப்ரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி, நாளை மறுமையில் மன்னர் மாநபி (ஸல்) அவர்களின் அருகாமையில் ஜன்னத்து பிர்தொவ்சில் குடியமர ஆசிக்கே ரசூல்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் ! வஸ்ஸலாம் . . .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross