கண்ணியத்துக்குரிய ”சுல்தான் அப்பா” அவர்களின் மரணச் செய்தியைக் கேட்டதும் உள்ளம் மிகவும் வலித்தது;
நான் கண்ட நல்ல மனிதர்களில் மிகச் சிறந்தவர்களாக என்றும் மதிக்கப்படத் தக்கவர்கள். நிறைய ஹாஃபிழ்களை உருவாக்கிய தன்னடக்கமான தூயவர். என் மீதும், என் மனைவி குழந்தைகள் மீதும் உள்ளார்ந்த அன்புடன் மிகுந்த பாசத்துடன் பழகும் உயர்வான மனிதர்.
எல்லாம் வல்ல - கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்தருளி, அவர்களது நற்கிரியைகள் அனைத்தையும் தனதருளால் பொருந்திக் கொண்டு, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் , நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீன்களுடன் அவர்களையும், நம்மையும் சேர்த்தருளும் சிறப்பான நல்வாழ்க்கையை வழங்குவானாக, ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!
அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross