Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[16 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28688
கவிமகனே உங்கள் ஆதங்கம் புரிகிறது, உங்கள் கோபம் நியாயமானது. அல்லாஹ்வின் கடைக்கண் பார்வையில் இந்த கயவர்கள் இல்லாமல் போவார்கள்,
ஆனால்....
கடைசி வரிகளில் இறைவா அவனுக்கு ஹிதாயத்தை கொடு என்று வேண்டியிருந்தால், அதை அல்லாஹ் கபூல் செய்தால் எத்தனை பேர் அவனை தொடர்ந்து இஸ்லாத்தை தழுவுவார்கள். நபிகள் நாயகத்தின் சிறிய தந்தை ஹம்சா அவர்களின் ஈரலைக் கடித்துக் குதறி துப்பிய ஹிந்தாவுக்கும் கண்மணி நாயகம் மன்னிப்பு அளிக்கவில்லையா. நாம் நபியின் நற்பண்புகளுக்கு கிட்டே கூட வரமுடியாது என்றாலும் இந்த புனித ரமலானில் பெரும் பெரும் பாவங்கள் மன்னிக்கப்படும் திருநாளில் சற்று மாற்றி துஆ கேட்போம்.
இறைவா எங்கள் எதிரிகளை மன்னித்து விடு, அவர்களுக்கு ஹிதாயத்தை கொடு. நீ மன்னித்ததால் அல்லவா பல கொடுங்கோலர்கள், நபியையே கொல்ல வந்தவர்கள் கூட நபி தோழர்கள் ஆனார்கள்.
மோடிக்கு வக்கலாத்து வாங்கவில்லை, நபியின் ஈர நெஞ்சுக்கு என்னை ஆளாக்கி கொள்ள இறைவனிடம் வக்கலாத்து வாங்குகிறேன்.
கவிமகனே! இறைவன் கூறுகிறான். முத்தகீன்கள் எப்படி பட்டவர்கள் என்றால், ALLATHEENA YUNFIQUOONA FIS SARRAAYI VAL LARRAAYI VAL KAALIMEENAL GHAILA VAL AAFEENA ANINNAAS. இறை பக்தியாளர்கள் யார் என்றால் அவர்கள் வாழ்விலும் தாழ்விலும் வாரி வழங்குவார்கள். கோபத்தை சவைத்து விழுங்குவார்கள். மனிதர்கள் செய்த பாவங்களை மன்னிப்பார்கள்.
கவிமகன் அவர்களே, உங்கள் சாபம் பொய்க்கட்டும் அல்லாஹ்வின் நீதி நிலைக்கட்டும். பகைவர்க்கும் அருள்வாய் நன் நெஞ்சே என்று மாற்றி பாடுங்கள். கவிஞர்களுக்கே உள்ள கோப கொப்பளிப்பு உங்கள் கவிகளில் தென்படுகிறது. இந்த பாவியின் ஹக்கிலும் துஆ செய்யுங்கள். எனது நிலைப்பாட்டில் தவறு இருந்தால் பெரும் மனது கொண்டு மன்னியுங்கள்.
மன்னிப்பதும் தண்டிப்பதும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. MAN GETS AND FORGETS, ALLAH GIVES AND FORGIVES.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross