Re:...பாராட்டுக்கள் posted bymackie noohuthambi (kayalpatnam)[15 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29488
நமதூர் சாதாரண கிராமம் மாதிரி இல்லை. ஒரு வழிப்பாதை அமைந்தும் கூட பிரதான சாலை பரபரப்பாகவே இருக்கிறது. இரு சக்கர வாகனங்கள் விபத்துக்கள் அதிகர்ரித்து நமது பிள்ளைகள் கை கால் உடைந்து சிகிச்சை பெற்று வரும் செய்திகள் நமக்கு கவலை அளிக்கின்றன.
படித்த பிள்ளைகள் பட்டதாரிகள் என்று சொல்லப்படும் பலர் தெருவின் நடுவிலே இருசக்கர வாகனங்களையும் சைக்கிள்களையும் நிற்பாட்டிக் கொண்டு போவோர் வருவோருக்கு இடைஞ்சலாக தெருவில் நின்று ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் அவர்களிடம் சொல்வதும் இல்லை, சொன்னாலும் அவர்கள் கேட்பதும் இல்லை. அப்படி நின்று பேசுவதை நாகரிகமாகவும் ஒரு ஸ்டைல் ஆகவும் நினைக்கிறார்கள்.
காவல் துறை நடவடிக்கை நியாயமானதே. ஆனால் அதை மாமூல் பெறும் நடவடிக்கையாக ஆக்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். லஞ்சம் கொடுத்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்தால் காவல் துறை நடவடிக்கையை மக்கள் மதிக்க மாட்டார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross