Re:...விளக்கம்... posted byசாளை பஷீர் (மண்ணடி , சென்னை)[28 August 2013] IP: 116.*.*.* India | Comment Reference Number: 29805
அன்பின் சகோதரர் நிஜார் அவர்களுக்கு !
தங்களின் வாழ்த்துக்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் !
நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். என்னால் இயன்ற அளவிற்கு விளக்க முயற்சிக்கின்றேன்.
இசை என்ற சொல்லுக்கு ஓசை ; சொல்; இசைப்பாட்டு ;நரம்பிற் பிறக்கும் ஓசை ; இசைக்கருவி வாசித்தல் ;இனிமை; ஏந்திசை; ஒழுகிசை சீர்; சுரம் என்பன போன்ற பொருள் உண்டு.
( சான்று :- தமிழ் இணைய கல்விக்கழக அகராதி , சென்னை பல்கலைக் கழக தமிழ் பேரகராதி )
எனவேதான் மனிதனின் குரல் வளை நாணிலிருந்து பிறக்கக் கூடிய இனிய ஓசைக்கும் , இசைக்கருவியிலிருந்து பிறக்கக்கூடிய இனிய ஓசைக்கும் மொத்தமாக இசை என குறிப்பிட்டேன்.
அடுத்ததாக இசைக் கருவி விஷயத்தில் மார்க்கத்தில் ஆட்சேபணை உள்ளது எனவும் கூறியிருந்தீர்கள்.
இததொடர்பாக மேல் வாசிப்பிற்காக இஸ்லாத்தில் இசை என்ற நூலை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இதன் ஆசிரியர் கலா நிதி முஹம்மது இமாரா. தமிழாக்கம்: அஷ்ஷைக் பி. தாரிக் அலீ நளீமி. வெளியீடு: நிகழ் பதிப்பகம் ,இலங்கை ( கை பேசி எண் :0094715171737 ).
இதில் இசைக்கருவி தொடர்பாக மார்க்க ரீதியாக எழுப்பப்படும் அனைத்து விதமான ஆட்சேபனைகளுக்கும் நூலாசிரியர் ஷரீஅத்தின் ஒளியில் நின்று உரிய விளக்கம் அளிக்கின்றார்.
இமாம் கஸ்ஸாலி { ரஹ் } அவர்களின் இஹ்யாவில் கிதாபுஸ்ஸமாஃ --- “ இசை கேட்பதில் இஸ்லாத்தின் ஒழுங்குகள் “ என்கின்ற அத்தியாயம் இசை பற்றிய சமனான பார்வையை முன்வைப்பதாக மவ்லவி அஷ்ஷேஹ் ஏ.பி.எம்.இத்ரீஸ் அவர்கள் கூறியுள்ளார்-- http://idrees.lk/?p=2072 .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross