சமீபத்தில் " சொல்வதெல்லாம் உண்மை " என்ற நிகழ்ச்சியை பார்தேன் www.youtube.com/watch?v=L_2EsZjRrOA
அதில் நமது சகோதர ஊராகிய "கீழக்கரை " பற்றிய ஒரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது !
மூன்று ஆண்கள் , மூன்று பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துள்ளார்கள் . அனைவரும் கீழக்கரையை சேர்ந்தவர்கள் .
அந்த உரையாடல் என்னை மிகவும் கவலை அடைய வைத்தது . காரணம் அதில் கருத்து சொன்னவர்கள் தங்கள் ஊர் முன்னைய ஊரைப்போல் அல்ல ! முற்றிலும் மாறிவிட்டது . எங்கள் ஊர் எங்களுக்கு பழைய ஊரைப் போல் வேண்டும் என சொல்கிறார்கள்!
காரணம் தங்கள் ஊரில் இப்போது சுகாதார கேடுகளால் , கடுமையான குப்பைமேடுகளால் , அழகிழந்து , மலேரியா , டெங்கு போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளது ! அழகிய வளமிக்க " கடற்கரை " மிகவும் அசிங்கப்பட்டு , குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது , அரசாங்கமும் , மாவட்ட நிர்வாகமும், தமிழக முதலமைச்சரும் இது விசயமாக கவனித்து எங்கள் ஊரின் இந்த அவல நிலைமையை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடுகிறார்கள் !
அன்பர்களே ! சிந்தியுங்கள் ! நமதூருக்கும் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு சில ஊர் நலனில் அக்கறையில்லாத சுயநலவாதிகளின் செயல்களே போதுமாகும் !
ஆகவே ! கீழக்கரை நமது முன்னோர்கள் வாழ்ந்த , வாழும் ஊர். கொடுக்கல் ,வாங்கல் ,வியாபாரம் ,திருமண சம்பந்தம் , ஆன்மீக தொடர்புள்ள இனிய ஊர் . இன்றும் ,நமக்கும் ,அவர்களுக்கும் உள்ள தொடர்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது .
அவ்வூருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை முற்றிலும் மாறி சுகாதார மிக்க ஊராகவும், சிறந்த , அழகிய , நோய்நொடிகள் அற்ற ஊராகவும் மாற வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக !
சகோதர்களே ! சிந்தியுங்கள் ! தமிழகத்தில் ஒரு அருமையான ஒரு ஊர் நமதூர் . அழகிய இயற்கையான சுகாதாரமான "கடற்கரையை" பெற்றுள்ளோம் !
நமதூரின் சுகாதாரம் , கடற்கரை , நகர் நல மன்றம் போன்ற பொதுநல அமைப்புக்களை பேணி பாதுகாப்பது நம் அனைவரின் மீதும் கடமையாகும் என உணர்ந்து செயல் படுவோம் !
நமதூரின் அமைப்பும், தெருக்களின் அமைப்பும் , பெண்களுக்கென தனிப்பாதை ,முடுக்கு ,வெட்டை , ஓடை போன்ற அமைப்பையும் பார்த்து இன்றும் பலரும் புகழ்ந்து பேசி வருவதை பார்க்கிறோம் ! அத்தகைய ஓர் அழகிய அமைப்பை சீரழிப்பவர்கள் யாரானாலும் தயவு,தாட்சண்யம் பார்க்காமல் அவர்களை அடையாளம் காண வேண்டும் ! அத்தகைய சுயநலவாதிகள் , பொதுநல நோக்கோடு , ஊரின் சுகாதாரம் , கல்வி, கலாச்சாரம் , கடற்க்கரை போன்ற அழகிய அமைப்புக்கு பங்கம் வாராமல் பாதுகாக்க முன்வரவேண்டும் ! அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட முயற்சிக்கவேண்டும் !
எல்லாம் வல்ல அல்லாஹ் அத்தகைய நல்ல நிலைமையை நமதூர் மக்கள் அனைவருக்கும் தந்தருள்வானாக ! ஆமீன் !!!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross