நோக்கம் என்ன? posted bykavimagan m.s.abdul kader (doha..qatar.)[08 September 2013] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 30037
சதக்கு தம்பி காக்கா அவர்களின் கருத்து முற்றிலும் சரியானது....
அந்த நாட்டில் பிறை....இந்த நாட்டில் பிறை.....அதெல்லாம் சரி...
அந்த நாட்டில் காணப்பட்ட பிறைகள் எல்லாம்,அந்த நாட்டின்
காலக் கணக்குக்கு ஏற்றதாக இருக்கலாம்....நமது பகுதியில் நாம்
காணும் பிறைதான்,நமது கணக்கு முறைக்கு ஏற்றதாக இருக்கும்...
எல்லாப் பிறைகளையும் நீங்கள் செய்தியாக்குவதன் நோக்கம்
என்ன? அதைத் தெரிவித்தால், பரஸ்பர புரிதலுக்கேனும் வழி
கிடைக்கும்...
Administrator: காயல்பட்டினத்தில் பிறை விசயத்தில் மூன்று விதமான நிலைப்பாடுகள் உள்ளன.
ஒன்று, அந்தந்த இடங்களில் பிறையை காண வேண்டும். இரண்டு, உலகில் எங்கு பிறையை கண்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்று, பிறையை கணக்கிட்டுக்கொள்ளலாம்.
இம்மூன்று நிலைப்பாடுகள் குறித்தும் நகரில் பல்வேறு தருணங்களில், பல்வேறு வகைகளில் விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளது/நடைபெறுகிறது. அவைகள் இவ்விணையதளத்தில் செய்தியாகவும், கருத்து பரிமாற்றங்களிலும், தலையங்கத்திலும் இடம் பெற்றுள்ளது.
பலர் விவாதிக்கும், அனைவரையும் பாதிக்கும் இவ்விசயத்தில் - ஊடகம் என்ற அடிப்படையில், விவாதங்கள் - ஆதாரங்கள்/ஆவணங்கள் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்காக - ஒவ்வொரு மாத பிறப்பிலும், இவ்விணையதளம் - கூடுதல் தகவல்களை - பல ஆண்டுகளாக வழங்கிவருகிறது. அந்த அடிப்படையிலேயே இத்தகவலும் வழங்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross