வரம்பு மீறியர்வர்கள் வாழந்த சரித்திரமே இல்லை...! posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[15 September 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30121
பொதுவாக அகதிகள் முகாம் என்றாலே அங்கு உயிருக்கும் உடலுக்கும் கற்புக்கும் பாதுகாப்பற்ற நிலைதான். இலங்கையில் தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் அகதிகள் முகாம்களில் இதைவிடக் கொடுமையும் கேவலங்களும் நடக்கும் அநியாயக் கூடாரமாக இருந்து வருவதை நாம் உதாரணமாகக் கூறலாம்.
சிரியாவின் நிலை மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. கொடுங்கோலன் பஷ்ஸாரின் அடக்கு முறை அமிலகுண்டுகள் வீசி அந்நாட்டு மக்களை அழித்தொழிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது. அப்பாவிகளான அந்நாட்டு மக்கள் பழைய நிலைக்கு திரும்ப நாம் அல்லாஹ்விடத்தில் கையேந்துவோமாக...!
“மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்”. அல்-குர்ஆன்(14:42).
வரம்பு மீறுவோரை தண்டிக்க அல்லாஹ் ஒருபோதும் தவறியதில்லை. ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்கள் அநியாயமாக நிகழ்த்தும் இத்தகைய கொடுமைக்கெல்லாம் ஓர் நாள், அல்லாஹ்வின் மகத்தான தீர்ப்பு மூலம் இவர்கள் எடுத்தெறியப்பட்டு இருந்த சுவடே தெரியாமல் அழிந்து போவார்கள். சரித்திர சான்றுகளும் இதைத்தான் பகன்று நிற்கின்றன.
சத்தியத்தின் பாதை தன்னில் சோதனைகள் பலதும் வரும். ஈமானில் உறுதி கொண்டோருக்கு எப்போதும் சோதனைதான். இறுதியில் அந்த ஈமான் தான் அவர்களை ஈடேற்றம் பெறச் செய்யும். உலகில் அகதிகளாக வாழும் அனைத்து தரப்பு மக்களையும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக ஆமீன்.
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross