Re:...வேதனை கலந்த உண்மைகள் posted bymackie noohuthambi (colombo)[25 September 2013] IP: 113.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30345
ஆசிரியரின் கட்டுரை தீனாரும் திர்ஹமும் இல்லாத ஒரு நாளில் தீன் மட்டுமே செல்லுபடியாகும் நாளில் நாம் எண்ணும் தீன்கள் தாரளமாக கிடைக்கும் ஒரு நாளை பற்றி சொல்லி இருக்கிறார்கள்.
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம். தீராத கோபம் யாருக்கு லாபம் என்று ஒரு தமிழ் அறிஞர் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.
திருமறை வசனங்களுக்கும் திருநபி பொன் மொழிகளுக்கும் குறைவில்லை. அதை அள்ளி தெளிக்கும் ஆலிம்களுக்கும் நம்மிடம் பஞ்சமில்லை.
ஆனால் துரசிர்ட வசமாக இன்றைய கால கட்டத்தில் பிரிவினைகள் சொத்து சுகங்கள் பறிக்கப்படுவதாலோ , உரிமைகள் மறுக்கப்படுவதாலோ ஏற்படுபவை மிக குறைவு. மாறாக அல்லாஹ்வின் பெயரால் அவனது நபியின் பெயரால் குர் ஆன் ஹதீதுகள் என்ற போர்வையில் உணர்வுகள் காயப் படுத்தப்பட்டு, கொப்பளங்கள் ரணமாகி புற்றுநோயாக பரிணாமம் பெற்று கசப்புணர்வுகள் பெருகி இருப்பதை காண முடிகிறது என்பதுதான் நிதர்சன உண்மை.
அவன் சிம்மாக போய்விட்டானாமே, அவன் வீட்டிலா சம்பந்தம் எடுப்பது, அவன் சுத்த கப்ரியாக இருக்கிறானே, அவன் வீட்டு கல்யாணத்துக்கா போவது, அவன் தப்லீக் ஜமாஅத்காரனாமே, நபியை சாதாரண மனிதர்தான் என்று சொல்கிரானாமே, அவன் சலாம் சொன்னால் பதில் சொல்வது கூட நம் ஈமானை பாதிக்கும் என்றெல்லாம் நம்மை அல்லாஹ்வின் பெயரால் நபியின் பெயரால் பிரித்து வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே, இவர்களை பற்றி ஆசிரயர் கண்டுகொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது.
நபிகள் நாயகம் சொல்வதாக அபூ தாவூதிலே ஒரு செய்தி வருகிறது. ஒருவர் ஒரு விஷயம் சரியாக இருந்தாலும் அதற்காக விவாதம் புரிவதை தவிர்த்துக் கொண்டால் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டி கொடுக்க நான் பொறுப்பேற்று கொள்கிறேன். ஒருவர் ஓர் சிறிய பிள்ளையை திருப்தி படுத்துவதற்காக பொய் சொல்வதை தவிர்த்துக் கொண்டால் அவருக்கு சொர்க்கத்தின் ஒரு பகுதியில் ஒரு வீடு கட்டி தர நான் பொறுப்பேற்று கொள்கிறேன் ..(.இன்னும் அதில் ஒரு பகுதி என் ஞாபகத்துக்கு வரவில்லை)..
இப்படி ஹதீத்கள் நிறைய இருக்கும்போது பிரிவினை வாதங்கள் வீண் விதண்டாவாதங்கள் நபியின் பெயரால் அல்லாஹ்வின் பெயரால் சிறிய விஷயங்கள் ஊதி பெரிதாக்கப்பட்டு நமதூரில் உறவுகள் அறுந்து கிடப்பதை ஆசிரியர் துணிவாக எடுத்து சொல்ல வேண்டும். இந்த பிரிவினைகள் சாதாரண அவாம்களால் ஏற்படுத்தப் பட்டது அல்ல, பெரும் பெரும் உலமாக்கள் என்று நம்மால் மதித்து போற்றப்படுபவர்களால் தினம் தினம் அரங்கேற்றப் படுகிறது.
இந்த கசப்பான உண்மைகள்,வேதனைகள், அடி வயிற்றில் அமிலம் சுரக்கும் காழ்ப்பு உணர்வுகள் எப்போது களையப்படும்...சற்று சமுதாயத்தை உசுப்பிவிடுங்கள்..இந்த மாற்றங்கள், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை, அடுத்தவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்கும் மனப்பாங்கு, பரந்த மனப்பான்மை எப்போது நம்மிடையே குடி கொள்ள ஆரம்பிக்குமோ அப்போது பிரிவினைகள், மன மாச்சரியங்கள் மறையும்.
திர்ஹமும் தீனாரும் பலனளிக்காத நாளில் அந்த வழக்குகள் மாலிகி யவ்மித்தீன் முன்னிலையில் நீதி மன்றத்துக்கு வரும்போது இங்கே அல்லாஹ்வின் பெயரால் நபியின் பெயரால் பிரிந்தவர்கள். அவர்களை பிரித்து வைத்தவர்கள் கை சேதப் படுவார்கள். ..வேதனை நிறைந்த உள்ளதுடன் ஆசிரியரின் கவனத்துக்கு எனது உள்ளக் கிடக்கைகளை சமர்பிக்கிறேன்.
உங்களால் ஒரு மனிதன் நேர்வழி பெற்றால் அது இந்த உலகம் அதில் உள்ள அனைத்தை விடவும் உங்களுக்கு சிறந்தது. மாறாக உங்களால் ஒரு உறவு முறிக்கபட்டால், ஒரு உள்ளம் உடைந்தால் அது கௌபதுல்லாவை இடிப்பதை விட கொடியது என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழியை இந்த நேரத்தில் ஞாபக படுத்திக் கொள்கிறேன்
இந்த ஹதீதுக்கு யாரும் ஆதாரம் கேட்காதீர்கள், சஹாபாக்கள் நபி சொன்னார்கள் என்றால் அப்படியே நம்பினார்கள். இப்போது அவர்கள் கேட்காத கேள்விகளை எல்லாம் நாம் கேட்டுக்கொண்டு அதற்கு விவாத மேடைகள் பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அல்லாஹ் நம் உறவுகளை பேணி நடக்க அருள் புரிவானாக, சிறு சிறு மாச்சரியங்களால், அல்லாஹ்வின் பெயரால் நபியின் பெயரால் நாம் பிரிந்து நிற்பதை மாற்றி எல்லோரும் ஒற்றுமையாக வாழ செய்வானாக,.
தீனாரும் திர்ஹமும் இல்லாத நாளை நினைத்து இப்போதே அதற்கு தயார் செய்யும் நல் உணர்வை நம் எல்லோருக்கும் தந்து அருள் புரிவானாக. ஆமீன்.
ஆசிரியர் மனம் புண்படும்படி எனது விமர்சனங்கள் அமைந்திருந்தால் அதற்கு நான் தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது ஆதங்கம் நியாயமானதுதான் என்று ஆசிரியர் உணர்ந்தால், இந்த விரிசல்களை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளும்படி வேண்டி கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross