விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கீழ நெய்னார் தெரு சாலை. posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[06 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3035
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சிமென்ட் சாலைகள் போடுகிறோம் என்ற பெயரில் ஆங்காங்கே தெரு முனைகளில் போர்டுகளை வைத்திருக்கிறார்கள். போர்டுகளில் அழகாக, தெளிவாக, முறையாக ஒப்பந்தத்தின் விவரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் சாலைகள் போடும் வேலைகள்தான் முறையாக ஆரம்பிக்கப்படவில்லை. ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் முறையாக நடைபெற வில்லை. போடப்பட்ட சாலைகளில் அழகுமில்லை, தெளிவுமில்லை.
--------------------------------------------
விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கீழ நெய்னார் தெரு சாலை.
கடந்த ஒரு வாரமாக கீழ நெய்னார் தெருவில் (முஹிய்யதீன் மெட்ரிக் பள்ளி அருகில்) சாலை தோண்டப்பட்ட நிலையிலேயே இருக்கிறது, சுமார் நூறடி தூரத்திற்கு, ஓர் அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு பள்ளமாக கிடக்கின்றது.
நெய்னார் தெரு முனையிலும் சாலை தோண்டப்பட்ட நிலையிலேயேதான் கிடக்கின்றது.
இதனால் கடந்த ஒரு வாரமாக மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதுடன், கீழ நெய்னார் தெருவில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பலரும் விழுந்து விபத்து ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும் இங்கு எந்த வாகனமும் ஸ்கூட்டரோ, ஆட்டோவோ, காரோ எதுவும் போகமுடியாத அளவில் பள்ளமாக இருக்கிறது.
ஒரு வாரமாக இருக்கும் இந்த இடையூறை அகற்றுவதற்கு அந்த பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் ஏதும் நடவடிக்கை எடுக்கக் கூடாதா?.
--------------------------------------------
தீவுத் தெரு - கீழ நெய்னார் தெரு முனையில் வைக்கபட்டிருக்கும் தகவல் பலகை.
காயல்பட்டணம் நகராட்சி சிறப்பு சாலைகள் திட்டம் : 2010 - 2011
கீழ நெய்னார் சாலை (தீவுத் தெரு முதல் முஹிய்யதீன் மெட்ரிக் பள்ளி வரை) சிமென்ட் சாலை அமைத்தல்.
மதிப்பீடு : 26.75
பணி ஆரம்பம் நாள் : 01 -12 - 2010
பணி உத்தேசமாக முடிவடையும் நாள் : 31- 03 - 2011
ஏறக்குறைய இருபத்தியேழு இலட்சம் ரூபாய்க்கு கொடுக்கபட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வேலை நாட்கள் 4 மாதங்கள்.
இதுநாள் வரை சாலை அமைக்கும் வேலை நடைபெறவில்லை. மூன்று மாதங்கள் சென்று விட்டன.
மேலே குறிப்பிட்டபடி இந்த சாலை நூறு அடி தூரத்துக்கு தோண்டிபோட்டதோடு நிற்கிறது, அதுவும் சென்ற வாரம்தான் தோண்டினார்கள். இனி அவர்களுக்கு இருக்கும் கால அவகாசமோ மூன்று வாரங்கள் மட்டுமே!?
இந்த மூன்று, நான்கு வாரத்திற்குள் சிமென்ட் சாலை போட்டு முடிப்பதாக இருந்தால் அந்த சாலையின் தரம் எப்படி இருக்கும் என்பதை மக்களே புரிந்துகொள்ளுங்கள்.
இதிலே காண்ட்ராக்டரை மட்டுமே என்னால் குறை சொல்ல முடியாது. நமது நகராட்சி நிர்வாகமும், உறுப்பினர்களுமே அதிக பொறுப்புக்குரியவர் ஆவர்.
------------------------------------------
பொது மக்களே!
இந்த மாதிரியான இடையூறுகள் இல்லாத, சுத்தமான, சுகாதாரமான நகரமாக நமது ஊர் திகழ வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் தயவு செய்து இனி வரும் காலங்களிலாவது அரசியல் கட்சியில் இல்லாத, பொது தொண்டு செய்யக்கூடிய, நேர்மையான, இறைவனுக்கு பயந்த மற்றும் சுறுசுறுப்பான நபர்களை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து நகராட்சியை மக்களாட்சியாக மலரச்செய்யுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross