Re:...மோகனா மோடியா... posted bymackie noohuthambi (colombo)[27 September 2013] IP: 113.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30415
கட்டுரை ஆசிரியரின் அலசலும் ஆதங்கமும் புரிகிறது. இந்த இருவரை விட நாம்தான் கொடியவர்கள்.
அல்லாஹ்வின் பெயரால் நபியின் பெயரால் எவ்வளவு இயக்கங்களாக முஸ்லிம்கள் இன்று பிரிந்து நின்று நமது வாக்கு வங்கியை பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
முஸ்லிம்கள் அவர்களுக்கு திருமறை, திருநபி இந்த இரண்டும் கொடுக்கப்பட்டு, உலகையே ஒரே குடைக்கு கீழ் கொண்டுவரும் திட்டங்கள் நம் கைகளில் தரப்பட்டது. சாம்ராஜ்யங்கள் முஸ்லிம்களின் கால்களை முத்தமிட்டன. அப்போது கணினிகள் இல்லை, விஞ்ஞான முன்னேற்றம் இல்லை. அல்லாஹ் ஒருவனைத்தவிர யாரும் இல்லை என்ற தாரக மந்திரம் மட்டும் முஸ்லிம்கள் கையில் இருந்தது. அந்த ஆயுதத்தை இன்று கலைஞரிடமும் புரட்சி தலைவியிடமும் கேப்டன் இடமும் இன்னும் இதை போன்ற எத்தனை அரசியல் தலைவர்கள் இருக்கிறார்களோ அவர்களிடம் அடகு வைத்து விட்டு, தறி கேட்டு போய் நிற்கிறோமே, நமக்கு தரப்பட்ட ஏணியை தூர தள்ளி விட்டு இன்னொருவரின் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவதை பெருமையாக நினைக்கிறோம்.
இஸ்லாமிய ஞானம் மிக்க திரு நகரை, சிறு மக்கா என்று உலகம் முழுதும் புகழப்பட்ட ஊரை கேவலம் கடவுளே இல்லை என்று சொல்லும் ஓர் தலைவரின் பெயரால் அழைப்பதை பெருமையாக நினைக்கிறோம். நமது பல்லை குத்தி நாமே நாற்றம் பார்க்கிறோம். ஒரு இறை ஒரு மறை ஒரு நபி என்று வாய் கிழிய பேசுகிறோம். ஆனால் இல்லாத ஒன்றுக்காக ஒரு பிறை ஒரே பிறை என்று பட்டி மன்றம் கருத்தரங்குகள் நடத்துகிறோம். மூன்று வெவ்வேறு தினங்களில் பெருநாள். ஒரே வீட்டில் மூன்று பெருநாள். நமது தொழுகைகள் காபாவை நோக்கினாலும் நாம் தொழுகும் முறைகளில் ஆயிரம் வில்லங்கங்கள்.
மோகனும் மோடியும் நம்மை பார்த்து கை கொட்டி சிரிக்கிறார்கள். நமது சபலங்களை, நமது வேற்றுமைகளை, நமது பிரிவினைகளை நமது பலவீனங்களை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
இந்த நிலையில் மோகன் ஆட்சிக்கு வந்தால் என்ன மோடி ஆட்சிக்கு வந்தால் என்ன. உச்ச நீதி மன்றம் அளிக்கின்ற தீர்ப்பு தனக்கு பாதகமாக இருக்கிறது என்பதற்காக, அவசர சட்டம் கொண்டு வந்து, உச்ச நீதி மன்ற தீர்பையே நீர்த்துப் போக செய்கிறார்கள்.
இருக்கிறவன் ஒழுங்காய் இருந்தால் சிரைக்கிறவன் ஒழுங்காய் சிரைப்பான்.
அல்லாஹ் அவனது திருமறையில் ஆணி அடிப்பது போல் சொல்கிறான்...
INNALLAAHA LA YUGHAYYIRU MAA BI QAWMIN HATTHAA YUGHAYYIROO MAA BI ANFUSIHUM
ஒரு சமுதாயத்தின் போக்கை அல்லாஹ் மாற்றமாட்டான் எதுவரை, அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள முன்வராத வரையில் என்று அதற்கு அறிஞர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.
ஒரு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி. நோன்பாளிகளுக்கு கஞ்சி கொடுக்க வேண்டிய இஸ்லாமிய தலைவர்கள், ஒரு காபிரான தலைவரை கூப்பிட்டு அவருக்கு நோன்பு கஞ்சி கொடுத்து அவரை நோன்பு திறக்க வைத்து? (அப்போதுதான் அவர் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டும் COCA COLA குடித்துக்கொண்டும் வந்திருக்கிறார்). அவர் பேச்சையும் கேட்டு ரசிக்கிறார்கள். "பேராசிரியர் அவர்கள் நான் பேச வேண்டும் என்பதற்காக தனது பேச்சை குறைத்துக் கொண்டார். அதே போல் எதிர்வரும் தேர்தலிலும் அவர் அதிக இடங்கள் கேட்பதை குறைத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்" என்று அந்த தலைவர் பேசுகிறார். எவ்வளவு கீழிறங்கி போய் விட்டது சமுதாய தலைவர்களின் போக்கு.
எனவே என்னை பொறுத்தவரை, மோகன் வந்தாலும் மோடி வந்தாலும் முஸ்லிம்கள் என்றும் இப்படித்தான் இருப்பார்கள் நமது தலை எழுத்து, நம் தலையில் ஏறித்தான் இவர்கள் திருவிழா பார்ப்பார்கள். அதற்காக நம் தலையை அவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கவும் நாம் தயாராக இருக்கிறோம் என்பதுதான் நிதர்சன உண்மை. அல்லாஹ்வாக பார்த்து ஒரு அதிசயத்தை ஏற்படுத்தினால்தான் இந்த இவர்களை தவிர வேறு ஒருவர் பிரதமராக வருவார். அல்லாஹ்விடம் து ஆ கேட்பதைவிட வேறு வழி இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross