நல்லொழுக்கம் மிக்கவர்களாக உருவாக்குங்கள். posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[10 October 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 30620
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
விளையாட்டு விழா மற்றும் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
விளையாட்டு விழாக்களையும் மற்றும் ஆண்டு விழாக்களையும் எல்லா பள்ளிக்கூடங்களும் வருடா வருடம் நடத்துகின்றன – அதன் மூலம் மாணவர்கள் புத்துணர்ச்சி பெறுவதுடன் , மாணவர்களின் பெற்றோர்களும் ஆனந்தமடைகின்றனர் – இது சிறப்புக்குரியதே!
-----------------------------
இன்றைய காலங்களில் ஆண்டுவிழாக்கள் என்ற பெயரில் மார்க்கத்திற்கு முரணானதும் , மாணவ பருவத்திற்கு எதிரானதுமான கூத்துக்களாக “ கலை “ என்ற பெயரில் சினிமா பாட்டுக்களையும் , டான்ஸ்களையும் அரங்கேற்றுகின்றனர் - இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
கல்வியை கற்று கொடுக்குமிடத்தில் நல்ல அறிவை கற்பதோடு அன்பையும், பண்பையும், ஒழுக்கத்தையும் கற்றால்தான் மாணவர்கள் பண்பட்டவர்களாக வளர்வார்கள். அதனால் கல்வியை போதிப்பவர்கள் இந்த விசயத்தில் கவனம் செலுத்தி தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து மாணவ சமுதாயத்தை நல்லொழுக்கம் மிக்கவர்களாக உருவாக்குங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross