காண்ட்ராக்டர்கள் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[08 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3074
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர்களே!
காண்ட்ராக்ட் எடுத்து நடத்தக்கூடிய அளவுக்கு ஊர் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் யாருமே இல்லையா ? என்று பலரும் ஆதங்கப்படுகிறீர்கள் உண்மைதான்.
நேர்மையாக நடக்க விரும்பும் நம்ம ஊருக்காரங்க யாரும் அரசாங்க சம்பந்தப்பட்ட காண்ட்ராக்ட் எடுக்க விரும்பமாட்டார்கள்.
காரணம் பலரையும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்க வேண்டும்.
அரசாங்க ஊழியரிலிருந்து வார்டு மெம்பர் வரை கவனித்தால்தான் காண்ட்ராக்ட் கிடைக்கும் அப்படி கவனிக்கும் பட்சத்தில் வேலையின் தரம் மிக,மிக மோசமாக இருக்கும்.
100 ரூபாய்க்கு காண்ட்ராக்ட் எடுத்தால் 25 ரூபாய் மதிப்புக்குத்தான் வேலை நடக்கும்.
இலஞ்சம் பலருக்கும் கொடுக்கப்படும் தொகை = 55
காண்டார்க்டரின் இலாபம் ------------------------------ = 20
ஆக மொத்தம் ----------------------------------------------- = 75
இந்த 75 போக மீதி இருக்கும் 25 க்குதான் ரோடு போட முடியும். இப்படி கொடுக்கும் தொகையில் கால் பங்குக்குத்தான் வேலை நடக்கும்.
இதை மிகைப்படுத்தி சொல்வதாக நினைக்க வேண்டாம், யாரையாவது எந்த ஊரிலாவது தெரிந்த காண்ட்ராக்டரிடம் விசாரித்து
பாருங்கள் தெரியும், எல்லா ஊரிலும் அப்படித்தான் என்பது.
இதன் காரணமாகவே நம் ஊர் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் காண்ட்ராக்ட் எடுக்க விரும்புவதில்லை.
-------------------------------
பொது நலத்தை விரும்பும், கறை படாத கைகளை உடையவர்கள் உறுப்பினர்களாக நமது நகரசபைக்கு வந்தால் இன்ஷா அல்லாஹ்!
காண்ட்ராக்டர்கள் சிலர் என்ன பலரும் உருவாகக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
அப்படி நமது ஊர் ஜமாஅத் காரர்கள் அல்லாது வெளியில் உள்ளவர்கள் காண்ட்ராக்ட் எடுத்தாலும் நல்ல திறமான ரோடுகளை போடுவார்கள்,
நமக்கும்/நமது உறுப்பினர்களுக்கும் அவர்களை கேள்விக் கேட்கக் கூடிய அதிகாரம் கிடைக்கும்.
அந்த ஒரு நல்ல பொது நலன்களை செய்யக்கூடிய ஒரு மக்கள் மன்றம் உருவாக எல்லாம் வல்ல அல்லாஹ்! நமக்கு கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross