Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் )[22 October 2013] IP: 59.*.*.* India | Comment Reference Number: 30911
அல்ஹம்து லில்லாஹ்.
பல நல்லவர்களின் துஆவை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து, ஒரு சிறு மழையை இறக்கியுள்ளான்.
ஒரு சிறு மழைக்கே, ஊர் தாங்கவில்லை. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
சென்ற வாரம் பெய்த மழை நீர், தெருக்களில் இன்னும் நீங்காத நிலையில், கூடுதல் சக்தி நீர் தேங்கி உள்ளது.
என் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு பைக்கில் புதிய கைலி கட்டிக்கொண்டு சென்றேன். நகராட்சி முன்பு உள்ள சாலைகள், அரிசிமாவு ரொட்டியை பிய்த்து போட்டமாதிரி,குண்டும் குழியுமாக, நீர் தேங்கி, கஷ்டத்துடன் கைலியில் நீர் பாடாதவாறு கடந்து விட்டேன்.
கொஞ்சம் கடந்ததும், MKT அப்பா வீட்டிற்கு அருகில், நிரந்தர, என்றும் விடிவுகாலம் பிறக்காத மழை நீர் குளம். வண்டியை முதல் கீருக்கு மாற்றி, ஸ்லொவ் ஆக ஒட்டி சென்று, சடக் ஒன்று ஒரு குழியில் விழுந்து, சட் என்று பிரேக் அடித்து, கீரை மாற்றி, அங்கும் இங்கும் வளைந்து, ஒடித்து கீழே விழாமல், ஒரு வழியாக அந்த குளத்தை கைலியில் சகதி நீர் படாமல் கடந்து விட்டேன்.
சபாஸ், என்னை நானே பாராட்டிக்கொண்டேன், இவ்வளவு அருமையாக வண்டி ஓட்ட துணை புரிந்த நம்ம நகராட்சிக்கு பாராட்டுக்கள்.
வீட்டை அடைந்தால், அங்கும் மழை நீர். வாகன ஓட்டிகளின் மழை நீர் தெளிப்புக்கு பயந்தது, ரோட்டில் அங்கும் இங்கும் ஜம்ப் பண்ணி, வீட்டிற்கு வந்து சேர்ந்த்தேன். வேஷ்டியில் ஒரு சகதியும் படாமல்.
இப்படி உடல் உழைப்பு, ஏக்சர்சைஸ் பண்ண உறுதுணையாக இருந்த நகராட்சிக்கு நன்றிகள் பல.
மக்ரிப், தொழுக அழைப்பு வந்ததும், மொகுதூம் பள்ளிக்கு சென்றேன். தொழுது விட்டு வந்ததும், ஒரு ஆட்டோ, தெருவில் உள்ள பள்ளத்தில் இறங்கி ஏற, மழை நீரை இரண்டு சிறுவர்களின் உடல் முழுவதிலும், என் புது கைலியில் ஒரு முழத்திற்கும் அபிசேகம் செய்து விட்டு சென்றான். யார் மீது கோபப்பட.!!
இப்படி ரோட்டை வைத்துள்ள, இரண்டு நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் கற்காலத்தை நினைவு படுத்திய, கோபம் வராமல், பொறுமையாக இருக்க.. இப்படி பலப்பல சாதனைகள் புரியும் நம் நகராட்சிக்கு நன்றிகள் பல.
கடைசியில், வீட்டிற்கு செல்ல, சகதி பட்ட புதிய கைலியை சூடு பார்வையுடன் அம்மணி காண, அந்த சூடு பார்வையில் உள்ள பல அர்த்தங்களை இன்னும் புரியாமல் தவிக்கின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross