செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இன்று தமிழக முதல்வருடன் சந்திப்பு! அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார்!! (தொலைகாட்சி படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byV. Syed Mohamed Ali (Zibo , Shandong , PRC)[28 October 2013] IP: 222.*.*.* China | Comment Reference Number: 31043
அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் சகோதரி ஆபிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
ஊர் நன்மையை நாடி இதை செய்தேன் என்று சகோதரி நினைத்தால் அது புத்திசாலித்தனம் .
மாறாக தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆளும் கட்சியில் இணைந்தேன் என்று நினைத்தால் அது அவரது முட்டாள்தனம் . ஏனெனில் ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றவேண்டியது அரசின் கடமை. இந்த அரசு மட்டுமல்ல , உலகின் எந்த அரசானாலும் தனது நாட்டின் மக்களை காப்பாற்ற முனைப்பாகவே உள்ளது .
தலைவியும் , ஆளும் கட்சியில் இணைந்த ஒருசில மன்ற உறுப்பினர்களும் தேர்தல் வாக்கு சேகரிப்பின்போது சுயேட்சையாக நின்றுதான் வாக்கு கேட்டார்கள். கட்சி சார்பாக வந்திருந்தால் சூழ்நிலையை பொருத்து நிலைமை மாறி இருக்கலாம் .
ஆளும் கட்சியில் சேர்ந்தால்தான் சாதிக்க முடியும் என்று நினைப்பவர்கள், அடுத்த தேர்தலில் ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் "குரங்குத்தாவு" தாவுவார்களோ ?
தலைவிதான் ஏற்கனவே ஆளும் கட்சியில் சேர்ந்ததாக செய்திகள் வந்ததே. இப்போது மீண்டும் இணைந்தார் என்று செய்தி . குழப்பமா இருக்கே. ஒருவேளை அப்போது இணையும்போது போட்டோக்களும் TV செய்தியும் இருந்திருக்காது . அதனால்தான் இப்போது விளம்பரத்துடன் ஒரு இணைப்பு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross