வாழும் தலைமுறையினரான நாமே அதற்கு பொறுப்பு...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.)[19 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32100
தொன்மை வாய்ந்த காயல்பதிக்கு சமதிகள் மட்டுமே சான்றுகள் அல்ல! இன்னும் ஏராளமான சரித்திர பொக்கிஷங்கள் நம் மண்ணுள் புதைந்து கிடக்கின்றன. கண்ணுக்குத்தெரிந்த பழமைச் சின்னங்கள் பல முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து பாழாகிவிட்டன. நம் வழித்தோன்றல்களின் வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் காணாமல் போனதற்கு வாழும் தலைமுறையினர்களான நாம்தான் அதற்கு பொறுப்பு! நம் சொந்த மண்ணின் சுயசரிதத்தை சுருக்கமாக முடித்துவிட்டு முகவரி இல்லாத சமூகமாக அதை மாற்றி வருவதும் நாமே!
அழிந்து போனது பல, அழிக்கப்பட்டது சில. தற்கால வசதியை மட்டுமே கருதி கற்கால வரலாற்று சின்னங்களை சிதைத்துவிட்டு இப்போது நாம் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கின்றோம். தமிழ்ச் சங்கங்களின் வட்ட வடிவிலான கட்டட வடிவொத்து அமைந்திருக்கும் (பெரிய குத்பா பள்ளியின்) சதுக்கைத்தூண்கள், அதன் மேற்கூரையில் பொருத்தியிருக்கும் செப்புக்கலசம் ஆகியவற்றை நாம் இப்போதும் காணலாம். அப்பள்ளியின் உட்புறத்தோற்றமும் உறுதி மிக்கத்தூண்களும் இனி வருங்காலங்களில் வசதியைக் கருதி வழியனுப்பப்பட்டு விடுமோ? எனும் அச்சம்தான் மேலோங்குகிறது.
ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் ஒரு சரித்திர பின்னணி இருப்பதை நாம் மறுப்பதற்கில்லை! காயலின் சரித்திரத்தை ஒரு மீள் ஆய்வு செய்து வெளிக்கொணர்வதற்கு சமூக ஆர்வலர்கள் முன் வர வேண்டும். நம் பாட்டனார்களின் கால்ச்சுவடுகள் கண்டறியப்பட்டு கால பொக்கிஷமான பழமையின் பெருமைதனை உலகிற்கு உணர்த்த நாம் நம்மிடத்தில் இருப்பதை பாதுகாத்தாலே போதும். காயலின் பின்னணியை ஓர் தெளிந்த நீரோடையாய் நாம் நம் சந்ததிகளுக்கு விட்டுச்செல்லலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross