ஆண்டுகள் 15:காயல்பட்டணம்.காம் இணையதளம் குறித்த முன்னாள் 1வது வார்டு காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஏ. லுக்மான் கட்டுரை! [ஆக்கம் - ஏ. லுக்மான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது சகோதரர் லுக்குமான் அவர்களின் காலம் கடந்த பதிவு.. இதோ...இங்குதான் தவறு நடக்கிறது. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[20 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32118
சகோதரர் லுக்குமான் காக்கா அவர்களின் ஆக்கத்தில் பல அனுபவத்தை அவர் வெளி படுத்தி உள்ளார்.. அதை எடிட் செய்யாமல் முழுதையும் வெளியிட்டு இருப்பது ஊடகத்தின் தரத்தை உயர்த்த செய்கின்றது... மேலும் மேலும் சிறந்து இந்த ஊடகம் வளர வாழ்த்துக்கள்...
நகர்மன்ற நடவடிக்கைகளைப் பொருத்த வரை, ஊர் நலன் கருதி கொண்டு வரப்பட்ட எல்லா தீர்மானங்களும் மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அவற்றை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசையும், அதன் அதிகாரிகளையும் சார்ந்த விஷயம். இங்குதான் தவறு நடக்கிறது. CP இது சகோதரர் லுக்குமான் அவர்களின் காலம் கடந்த பதிவு..
இந்த தவறை அன்று உணராத இன்றைய உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவியால் தான் வேலைகள் நடைபெறுவது இல்லை இந்த தலைவியால் தான் எல்லாம் கிடப்பில் கிடக்கின்றன ஆகையால் தலைவி பதவி விலக வேண்டும் என்றும் இன்னும் பல வகைகளில் தொல்லைகள் கொடுக்கப்பட்டன...! ஆனால் இன்று உறுப்பினர்கள் மனதில் எங்கு தவறு நடக்கின்றது என்று உணர ஆரம்பித்து விட்டது போல சமீபத்திய 18 டிசம்பர் நகர்மன்ற கூட்டத்தின் போது பிரதிபலித்தன...
ஊழல் எதிர்ப்பு இயக்கம் சென்னை - காயல்பட்டினம் கிளையின் சார்பாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தின் போது பேசிய விருத்தாசலம் முன்னால் நகர்மன்ற தலைவர் வள்ளுவனின் விழிப்புணர்வு உரையினை காலம் சென்று இன்று நமது நகர்மன்ற உறுப்பினர்கள் உணர்ந்துள்ளார்கள்..
வள்ளுவனின் முக்கிய உரையின் சில வரிகள் இதோ... "என்றைக்குமே நகர்மன்ற தலைவரையும் - நகர்மன்ற உறுப்பினர்களையும் பிரித்து வைத்து இருக்கவே நகர்மன்ற அரசு அதிகாரிகளும் - ஊழியர்களும் செய்வார்கள்.. ஒற்றுமையாகவே இருக்க வைக்க மாட்டார்கள் என்பது தான்"
18 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் பல தவறை சுயமாக சிந்தித்து கண்டுபிடித்து இந்த.. இந்த... தவறுகளுக்கு நீங்கள் தான் உங்கள் டிப்பார்மென்ட் தான் காரணம் நீங்கள் தான் ஒத்துழைப்பது இல்லை... உங்களால் தான் பிரச்சனையே ஆரம்பம் என மிக ஆக்கரோசமாக கடுமையாக நகர்மன்ற அதிகாரிகளை 5 வது வார்டு உறுப்பினர் தம்பி ஜகாங்கீர் வருதெடுத்தார்... மேலும் அவர் கூறியாதவது இப்போது முழுதையும் விளங்கி கொண்டோம் நாங்கள் (ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் குறிப்பிட்டு) எங்களுக்கும் - தலைவிக்கும் என்ன சொத்து தகராறா...? இது முன் நாங்கள் சண்டை பிடித்தோம் அந்த சண்டைக்கெல்லாம் காரணம் நீங்கள் தான் என்று இப்போது விளங்குகிறது என குறுப்பிடுகிறார்...
இதில் இருந்து நமக்கு (நடுநிலையாளர்களுக்கு) என்ன விளங்குகிறது வள்ளுவளின் அனுபவ பேச்சு உண்மையாகிறது என புரிகிறது...
மீதமுள்ள ஆண்டுகளில் தலைவியோடு உறுப்பினர்களும் உறுப்பினர்களோடு தலைவியும் சேர்ந்து நகர்மன்றத்தில் உள்ள அதிகாரிகளை - ஊழியர்களை வேலை வாங்குவதில்
முக்கிய கவனம் செலுத்துங்கள்... இன்சாஹ் அல்லாஹ்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross