இன்னும் எதை எதிர்ப்பார்க்கிறோம்... வேண்டும் ஒரு மூன்றாம் அணி..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[31 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32234
இதை தான் நான் பல ஆண்டுகளாக எதிர்ப்பார்த்தேன்...!
வாழ்த்துக்கள் - பாராட்டுகள்... இதன் வரவால் இது முன் நான் வாக்களித்த கட்சியை புறக்களித்து ஊழலுக்கு எதிரான அமைப்புகளின் கூட்டமைப்புக்கு வாக்களிக்க விரும்புகிறேன்...
தமிழக மக்கள் வேறு வழியின்றி இரு கட்சிகளையும் மாற்றி மாற்றி ஆட்சி மாற்றம் செய்ய வைக்க வாக்களித்து வாக்களித்து சலித்து வெறுத்து விட்டார்கள்... இந்த தமிழகத்தில் ஒரு நல்ல அரசு நிர்வாகம் ( ஊழலுக்கு எதிரான ஆட்சி) மாற்றம் வராதா..! என மனதுக்குள் வேதனை பட்டவர்கள் பல ஆயிரம் நபர்கள் - அந்த வேதனைக்கு மருந்தாக இன்று ஒரு நல்ல செய்தியை படிக்கும் போது ஒரு மன அமைதி பிறக்கின்றது..
அரசு அதிகாரிகளில் சிலர் ஊழலிலேயே பெருத்து வளர்ந்து வருபவரும் - மக்களில் சிலர் தனக்கு சாதகமாக அரசு அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்து (மோசடி) ஆவணங்களை பெற்று வருபவர்களும் இந்த மாதிரி ஊழலுக்கு எதிரான அமைப்புகளின் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை விரும்ப மாட்டார்கள்... அவர்களை வலுயிளக்க என்ன என்ன வழிகள் உள்ளதோ அதை கையாள்வார்கள்.
நல்ல மாற்றத்தை விரும்பும் மக்கள் நாம் நினைத்தாள் (கயவர்களை - திருடர்களை) இவர்களை முறியடித்து இன்று டெல்லியில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டது போல நாளை நமது தமிழகத்திலும் அமையலாம்...
ஊழலில் ஊறி போன அரசியல்வாதிகளில் சிலரை நமது ஊரிலேயே காலூண்ட விடாமல் நாம் முன்னோடியாக சில மாற்றங்களை முதலில் செய்வோம்...! நாம் நம் மனதுள் லட்சியம் வைத்து முயற்சி செய்தால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross