நாங்கள் கண்ட இவர்களின் வாழ்க்கை இபாதத்தாகவே இருந்தது......!!! posted byஎஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் (மவுன்ட் ரோடு, சென்னை-2)[01 February 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 32914
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எங்கள் குடும்பத்தலைவியும் எங்களின் வாப்பிச்சாவும் என் பாசமிகு தந்தையின் இன்னொரு தாயுமாகிய (சாச்சி) கதீஜா உம்மா ஹாஜ்ஜா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிகவும் கவலையுறுகிறோம்.
நாங்கள் கண்ட இவர்களின் வாழ்க்கை இபாதத்தாகவே இருந்தது.
அவர்களுக்கு பிள்ளைகளில்லை எனினும் மர்ஹூம் என் பாசமிகு தந்தை எஸ்.கே. அவர்களும் என் சிறிய தந்தை மர்ஹூம் அஷ்ரஃப் அலி ஃபாஸி (என் தந்தையின் இன்னொரு சாச்சி மகன்) அவர்களும் இவர்களின் செல்லப்பிள்ளைகள். இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் நமதூரில் உள்ள பலரை தமது அறிவாற்றலால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த என் தந்தை அவர்கள் தம்முடைய மன ஆறுதலுக்காக பல நேரம் ஒதுங்குவது இச்சீமாட்டியின் வீட்டில் தான்.
சங்கைமிகு ஷாம் ஷிஹாபுத்தீன் (வலி) அவர்களின் சின்ன ஹதீது மாணிக்க மாலை மற்றும் பெரிய ஹதீது மாணிக்க மாலை நூல்களிலிருந்த ஏராளமான பாடல்களை மனனமிட்டிருந்த அவர்கள் வீட்டில் கருத்து கூறவோ மார்க்கம் பேசவோ தேவைப்படும்போதெல்லாம் அப்பாடல்களையே தமது வார்த்தைகளாகப் பாடி மேற்கோள் காட்டுவார்கள்.
குர்ஆனின் பல அத்தியாயங்களை இவர்கள் மனனமிட்டிருந்தார்கள்.
இவர்களின் கடைசி நாட்கள் படுக்கையில் கழிந்து கொண்டிருந்தது நான் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களைப் பார்க்கக்கூடிய நேரத்தில் மிகுந்த மன வருத்தத்தை அளித்தாலும் “சரி, இத்தனை நாட்களாக நம்மிடையே பேசிக்கொண்டிருந்தவர்கள் இனி தன்னைப் படைத்தவனின் கட்டளைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என நினைத்து என் மனதை தேற்றிக் கொள்வேன்.
வல்ல ரஹ்மான் தனது கருணையால் அன்னாரது பாவங்களை மன்னித்து கப்ரின் கேள்வி கணக்குகளை அவர்களுக்கு மிக எளிதாக்கி மறுமை வாழ்வில் தனது மேலான சுவனபதியாகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில் அன்னாரைப் பிரவேசிக்கச் செய்வானாக, ஆமீன்.
மிக்க துயரத்துடன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
மற்றும் குடும்பத்தார்கள்.
சென்னை&காயல்பட்டணம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross