Re:...மறைந்தார்கள் காயல் நகரின் கதீஜாப் பிராட்டியார். posted bypaalappaa A.K.Muhiyiadheen Abdhul Kaadhar (chennai)[01 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32941
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹித் த ஆலா வ பறக்காத்தஹு.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எனக்கு மனைவி வழி வாப்பிச்சா என்றபோதும் எனது மூத்த சகோதரர் ஜனாப் அழ-ஹாஜ் பாலப்பா A.Kயாசீன் அவர்களின் இல்லத்தார்களோடு மறைந்த இறை நேசப் பெண்மனியாருக்கு நெருங்கியத் தொடர்பின் அடிப்படையில் என் மீது பாசம் வைத்து பல முறை அடியேனுக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சுல்லார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
சமூக சேவகரும்,எழுத்தாளருமான எனது மச்சான் S K ஷமீமுல் இஸ்லாம் அவர்களின் கூற்றிர்க்கினங்க்க கண்ணியத்திற்குரிய மர்ஹுமா அவர்களிடம் நமது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் சித்தார்ந்தத்தை மறுதலித்துப் பேசும்பொழுது காயல் நகர் தந்த காமில் வலி ஷாமு ஷிஹாபுத்தின் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் யார்த்தளிக்கப்பட்ட சின்ன ஹதீது மாலை,பெரிய ஹதீது மாலைப் போன்றவற்றிலிருந்து மர்ஹுமா அவர்கள் விளக்கமளிப்பதன் மூலம் வினவியவர் வியந்தவாறு மலைத்திடுவர்.
இத்தகையப் பேரொழுக்கப் பெருமாட்டியான வனிதயரொலி அவர்கள் வாழ்ந்த காலையில் நானும் வாழ்வதைப் பெரும்பேரெனனக் கருதிப் பேருவகயடைகின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அலப்பெருங்க் கருணையால் அண்ணலெம் பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பரிந்துரையைப்(ஷபாத்) பெற்றவர்களாக சுவனத்தில் ஜன்னத்துல் பிர்தௌசென்னும் உயரிய இடத்தில் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தலைமையில் லிவாவுல் ஹம்தென்னும் கொடியின் கீழ் இறை நேசப் பெண்மணியான மர்ஹுமா அவர்களையும் நம்மையும் அமரச் செய்வானாகவும்!ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross