மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மைநிலை! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[04 February 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33007
அரசு அங்கீகரிக்கும் சேனல் எத்தனை, அதையும் தாண்டி மிகுதியாக எத்தனை சேனல் நமக்கு தருகிறார்கள் என்ற விபரம் தெரிந்தபிறகே இவர்கள் கேட்கும் அதிக தொகையைபற்றி நடவடிக்கை எடுக்க முடியும்!
அடுத்து 1ந் தெய்திக்கே வந்துவிடுகிறார்கள் என்பதை எங்கள் பகுதயில் ஏற்பதிற்கில்லை. ஏனெனில் மாதம் பிறந்து
பல நாட்கள் கழித்துதான் வருகிறார்கள்! அதிலும் வாசலில் வந்து "ராத்தா,ராத்தா" என்று பரிதாப குரலில் தான் கூப்பிடுகிறார்கள், "யாரு வாப்பா" என்று பதில் குரல் வருகிறது,கேபிள் டிவி ராத்தா எங்கிறான், உடனேயே ராத்தாவிடம் இருந்து வரும் பதில் "நாளைக்கு வாம்மா"
இந்த உரையாடலை பலதடவை கேட்டிருக்கிறேன் நான்,
ஒரு தடவை நான் கூட சொன்னேன் ஏன் பணத்தை கொடுத்துவிட வேண்டியது தானே என்றேன், ஆமா
இப்ப எழும்பிபோய் எடுத்து கொடுக்கணும்,கையில் வேலையா இருக்கிறேன். பொறவு வருவான் இல்லைண்ட நாளைக்கு வருவான் என்றாள் என் இல்லத்தலைவி இல்லை,இல்லை இல்லத்த்தரசி.
இதுதான் எதார்த்தம் ஒரேடியா ஒரு சாரார்மீதே குறைகளை கிளறுவதை விட நம்மிலும் என்ன நடக்கிறது என்று சற்று நினைத்துபார்க்க வேண்டும்!
இந்த சேனனினால் எத்தனையோ பிள்ளைகள் படிப்பு வீணாகிறது,எத்தனையோ வாலிப பெண்களின் விரச உணர்வு வளர்கிறது,எத்தனையோ வீட்டில் தற்போது வெள்ளி இரவு குரான் ஓதுவது கூட இந்த டிவி சீரியலால் தடைபடுகிறது என்ற வேதனை மிகு நிலைதான் நிதர்சனமான உண்மை!
இவை அனைத்திற்கும் வடிகாலாக ஒட்டுமொத்தமாக கேபிள் டிவி.வேண்டாம் என்று நாம் முடிவெக்க முன் வரொமெயானால் அதற்க்கு முதலில் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் நம்முடைய பெண்கள்தான் (எங்கள் வீட்டு பெண்ட்டினர் உட்பட)
இதுதான் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மைநிலை!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross