இந்த ஒப்பந்தக்காரரை விட்டால் ஆள் இல்லையா? posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[27 February 2014] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 33392
நமது நகராட்சியில் ரோடு போடுவது மற்றும் இதர சிவில் வேலைகளை பார்ப்தற்கு, திரு.தலவாணி முத்து மட்டுமே ஒப்பந்தம் எடுக்கின்றாரே? இவரை விட்டால் வேறு ஒப்பந்தக்காரர்களே இல்லையா? இந்த நபர், பல சின்ன சின்ன வேலைகளை எடுத்து, அந்த பணிகளை முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்களால் கூறப்பட்டது.
இப்படி மீண்டும் மீண்டும் அவருக்கே கிடைப்பது எப்படி? வேறு ஒப்பந்தக்காரர்கள் இந்த நகராட்சியில் டெண்டரே போட மாட்டார்களா? அல்லது இவர், மற்றவர்களை போடவிடாமல் தடுக்கிறாரா? நகராட்சி அதிகாரிகளுக்கும் இவருக்கும் ஏதாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் (UNDERSTANDING ) இருக்கிறதா?
அதே போல், பெரிய வேலைகளுக்கு, திரு.நாகூர் மீராசா மட்டுமே ஒப்பந்தம் எடுக்கிறார். அதுவும் சொல்லி வைத்தாற்போல், டெண்டர் தொகையை விட 4.95% அதிக தொகை கேட்டு எடுக்கிறார்.(5% -க்கு மேல் QUOTE பண்ணினால் நகராட்சியால் முடிவு செய்ய இயலாது)
ஒண்ணுமே புரியேல்ல இந்த நகராட்சியில். இதற்கும் சிலர் உள்அர்த்தம் கற்பித்து, சென்ற நகராட்சியில் நடக்கவில்லையா? என்று கேட்பார்கள். எப்போது நடந்தாலும் தவறு, தவறு தான். இப்ப மீடியாக்கள் ரொம்ப கண்கொத்தி பாம்பாக இருப்பதனாலும், பொதுமக்களுக்கும்(என்னையும் சேர்த்து) விழிப்புணர்வு ஏற்பட்டதனாலும், எழுந்த கேள்வி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross