Re:...து ஆக்கள் மட்டுமே வெற்றியை பெற்று தருமா? posted bymackie noohuthambi (chennai)[04 March 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33501
என்னடா ஆரம்பமே சரியில்லையே என்று நினைப்பவர்கள் சற்று நிதானமாக சிந்தித்துப் பார்ப்போம்.
நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களிடம் ஒரு நபி தோழர் கேட்டார், "நபியே நாயகமே, மறுமை நாள் எப்போது வரும்?" உடனே நபிகளாரிடம் இருந்து வந்த பதில், "அதற்காக நீர் என்ன தயார் செய்து வைத்திருக்கிறீர்?
தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இந்த கேள்வி பதில் பொருந்தும்.
இன்னொரு நபி தோழர் நான் வியாபாரத்துக்கு போகிறேன், இன்று நஹ்சு (நமது பாஷையில் கெட்ட நேரம்) உண்டா? என்று கேட்டார். நபிகள் நாயகம் கேட்டார்கள் இன்று சுபுஹு தொழுகையை ஜமாத்துடன் தொழுதீரா? ஆம் என்று பதில் வந்தது. அப்படியானால் நஹ்சு இல்லை, சென்று வாருங்கள் என்று து ஆ செய்து அனுப்பினார்கள்.
எந்த ஒரு நல்ல காரியம் செய்ய புறப்படும்போதும், இரண்டு ரகா அத நபில் தொழுது அல்லாஹ்விடம் து ஆ கேட்டு விட்டு புறப்பட வேண்டும். வழிமுறை.இப்போது து ஆ கேட்பதிலும் ஒரு முறை.
அல்லாஹ்வை அதிகம் அதிகம் புகழ்ந்து நபிகள் நாயகம் அவர்கள் மீது சலவாத் சொல்லி து ஆ கேட்க வேண்டும். பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய து ஆ - யா அல்லாஹ், நான் படித்த பாடங்கள் என் நினைவுக்கு வர வேண்டும், அந்த ஞாபக சக்தியை எனக்கு நிறைவாக தா, எந்த வித பதட்டமும் அவசரமும் இல்லாமல் நிதானமாக கேள்விகளைப் படித்து அதனை உள்வாங்கி அதற்கான விடைகளை நான் எழுதுவதற்கு அருள் புரிவாயாக என்று படிப்பு சம்பந்தமாக, நினைவாற்றல் சம்பந்தமாக அல்லாஹ்விடம் து ஆ கேட்க வேண்டும். போகும் வழியில் தென்படும் ஏழைகளுக்கு நம்மால் முடிந்த தர்மம் செய்து கொள்வது நமது து ஆக்களுக்கு வலிமை சேர்க்கும். இவை நபிகள் நாயகம் நமக்கு காட்டி தந்த நடைமுறை, அழகிய முன்மாதிரி.
எனவே பரீட்சைக்கு செல்பவர்கள் படிக்கும் காலத்தை வீணடித்து விட்டு இப்போது பரீட்சை வரும்போது அதிரடியாக இரவு கண்விழித்துப் படிப்பதும், அடுத்த நாள் காலை சுப்ஹும் தொழுகாமல், குளிக்காமல் பரபரப்பாக பரீட்சை மண்டபத்துக்கு செல்லும் வழியில் சில இறை நேச செல்வர்களிடம் எனக்காக து ஆ செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்டு பரீட்சை மண்டபத்துக்கு சென்று, தாங்கள் எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை என்றவுடன் என்ன து ஆ கேட்டீர்கள் என்று நல்லவர்களை சாடுவதும் பயன்தராது என்பதை நன்கு உணர்ந்து மேலே சொன்ன நன்னெறிகளை மேற்கொண்டு பரீட்சை எழுத செல்லுங்கள். இப்போது அல்லாஹ்வின் உதவி வரும் ஞாபக சக்தி அதிகரிக்கும் வெற்றி வாய்ப்புக்கள் நம்மை நோக்கி வேகமாக வரும்.
இப்போது மேலே உள்ள தலையங்கத்தை படியுங்கள். உண்மை புரியும். வெற்றியின் சூட்சுமம் - து ஆ வின் பெறுமதி விளங்கும். NASRUM MINALLAAHI VA FATH'HUN QAREEB. வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross