செய்தி: ஆம் ஆத்மி கட்சி தமிழக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! தூத்துக்குடியில் புஷ்பராயன் போட்டி!! கன்னியாகுமரியில் உதயகுமார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் ஒரு சில தொகுதிகளின் போட்டியிடுகிறது. நாடு முழுவதும் ஊழலுக்கும் மதவாதத்திற்கும் எதிராக மிக பெரிய விழிப்புணர்வையும் புரட்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
மற்ற திராவிட காட்சிகள் எல்லாம் மோடிக்கு வால் பிடிக்க அலையும் போது மதவாத ஊழல் கட்சியான பிஜேபி யையும் அதன் பிரதம வேட்பாளரான மோடியையும் நாடு முழுவதும் முகத்திரையை கழுத்து வருகிறார். இதன் தாக்கம் சமீபத்தில் டெல்லி சட்டசபை தேர்தலில் தெரிந்தாலும், நாடு முழுவதும் ஊழலுக்கு பாசிசத்திற்கு எதிரான போக்கு வளர்ந்து வருகிறது .
60 வருடமாய் கழகங்களுக்கு ஒட்டு போட்டதன் பயன் இன்று நாம் அனுபவித்து வரும் நாடு முழுவதும் மலிந்து போல ஊழல் மறத்து போன நம் எண்ணம் .. ஜெயலலிதா சொத்துகுவிப்பு என்றால் அதை மறக்கடிக்க செய்யும் அடுத்த ஊழல் 2G .அடுத்து வரும் ஆட்சியாளர் இதை விட இமாலய ஊழல் செய்து அதை மறக்க செய்வார் மக்களின் மறதி ஒன்றே அவர்களின் நம்பிக்கை! பலம்!! நாமும் எதை பற்றியும் கவலை படாமல் ஓட்டை போட்டு விட்டு அடுத்த 5 வருடங்களுக்கு புலம்பிகொள்வோம்
நாம் மாறாத வரை சமூகத்தில் ஒரு மாற்றமும் எற்படபோவதில்ல்லை மாறி மாறி ஊழல்களுக்கு வோட்டு போடுவதை விட்டு விட்டு ஒரு முறை மாற்றம் வேண்டி நாம் ஏன் ஆம் ஆத்மியை ஆதரிக்க கூடாது .. எல்லோரும் வெல்லும் கட்சிக்கு தான் ஒட்டு போடுவோம்னு சொன்னால் மாறி மாறி திராவிட கட்சிகளிடம் அடகு வைத்து கொண்டே இருக்க வேண்டியதுதான், நம் முதுகில் சவாரி செய்து அவர்கள் முன்னேறிகொண்டே போகட்டும் என்று விட்டு கொண்டே தான் இருக்க வேண்டுமா .. இன்று ஆம் ஆத்மி நிறுத்தி இருக்கும் வேட்பாளரையும் மற்ற கட்சி வேட்பாளரையும் கொஞ்சம் எடை போட்டு பாருங்கள் .. இந்த வேட்பாளர் கொள்ளையர்களுக்கு எதிராகவும் மனித உரிமைக்காவும் வாழ்வாதாரங்களுக்காகவும் போராடிய போராட்டங்கள் தன எத்தனை !!
நிலத்தடி நீரை நச்சாக்கிய, கடல்வளங்களை மாசுபடுத்திய, இறால்பண்ணைகள் எதிர்த்து போராட்டம்.
தூத்துக்குடி நகரத்தையே மாசுபடுத்திய உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம்.
நாசகார ஸ்டெர்லைட் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – இன்றுவரை சட்டப்போராட்டம்..
தென்மாவட்டங்களில் தாதுமணல் கொள்ளையை எதிர்த்து கால் நூற்றாண்டு காலப்போராட்டம்.
தென்தமிழகத்தை பூண்டோடு அழிக்கும் கூடங்குளம் அணுஉலைகள் எதிர்ப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை எதிர்த்த போராட்டங்களில் பங்கெடுப்பு.
தாமிரபரணி ஆறு மாசுபடுவதை, கம்பெனிகளால் உறிஞ்சப்படுவதைக் கண்டித்து போராட்டம்.
தூத்துக்குடி நகரம் அனல்மின் கழிவுகளால் மாசுபடுவதைக் கண்டித்து போராட்டம்.
தாமிரபரணி தண்ணீரை உறிஞ்சும் கொக்கோ கோலா கம்பெனிக்கு எதிரான போராட்டம்.
இவரி ஏன் நாம் ஆதரிக்க கூடாது ... இன்று நம்மை கொன்று கொண்டிருக்கும் DCW என்ற அரக்கனுக்கு எதிரான போராட்டத்தில் ஏன் இவரை இணைத்து கொள்ள கூடாது .. கழகங்களும் கட்சிகளும் அவர்கள் போடும் எலும்பு துண்டிற்கு பலியானவர்கள் தான் என்று நாம் கண்டு வருகிறோம் .
நாளை மதவாத கட்சிகள் நமக்கு எதிராக ஒரு தீர்மானவோ திட்டமோ கொண்டு வந்தால் கண்டிப்பாக நம் சமூதாய கட்சிகள் எதிர்பார்கள் என்று நம்புவோம் ஆகையால் நாம் சமுதாய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் அவரை ஆதரித்தும், மற்ற இடங்களின் நமக்கு துணையாகவும் இன்று நாட்டை அச்சுறுத்தும் மதவாத மோடிக்கு எதிராக வீரியத்துடன் போராடிவரும் கட்சியான ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து நாம் வாக்குகளை இந்த முறையாவது மனதிருப்தியுடன் நல்லவருக்கு போட்டோம் என்ற நிலையுடன் உபயோக படுத்தி கொள்வோம் . துடைப்பத்தை கொண்டு ஊழலையும் மதவாதத்தையும் துடைத்து எடுப்போம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross