திமுக MP -களின் சாதனைகள் என்ன? posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[13 April 2014] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 34277
தொலைக்காட்சி பெட்டிகள் தமிழகம் முழுவதும் தான் கொடுத்தார்கள். 1999 முதல் 2014 வரை உள்ள இந்த 15 ஆண்டுகளில், 3 MP -களை தேர்தெடுத்து அனுப்பி உள்ளோம். இவர்கள் செய்த நலத்திட்டங்கள் ஒன்றுமே இல்லை என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்ததற்கு நன்றி.
ஒவ்வொரு MP க்கும் தொகுதி மேம்பாட்டு நிதி வருடத்துக்கு ரூ.5 கோடி வீதம், மத்திய அரசு ஒதுக்குகிறது. 1 MP -யின் பதவி காலத்தில் ரூ.25 கோடி. 1999-2014, இந்த 15 ஆண்டுகளில், 3 MP X 25= ரூ.75 கோடி. இதில் ஒரு நயா பைசா கூட நமதூருக்கு செலவழிக்கவில்லை. இந்த லட்சணத்தில், ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டுக்கு நிதி கேட்ட போது, இப்போதைய MP -யின் நக்கல் பேச்சு வேற.
இந்த MP நிதி ஒதுக்காதது மட்டுமில்லை, இந்த ஸ்டேஷன் விஷயமாக, அப்போதைய ரயில்வே இணை அமைச்சராக இருந்த ஜனாப். E அஹ்மத் அவர்கள் எடுத்த முயற்சியை, follow up செய்ய கூட இல்லை. 1999-2004 வரை MP - யாக இருந்தவரின் சொந்த ஊர், நாசெரேத் ஸ்டேஷன் எப்படி இருக்கிறது பாருங்கள். நமதூர் ஸ்டேஷனையும் பாருங்கள்.
இந்த நோட்டிசை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, அடுத்த தேர்தலிலும், இதே சாதனை பட்டியல் & வாக்குறுதியை தருவார்கள். நாம்தானே இளிச்சவாயான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross