Re:... posted byS.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A)[21 April 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34515
"முஸ்லிம் சமுதாயம் - நடப்பு தேர்தலை, மோடி பிரதமர் ஆவதிலிருந்து தடுப்பதற்கான தேர்தல் என்ற பார்வையிலிருந்து விலகவேண்டும்." copy paste.
இன்னும் இரண்டு தினங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த தலையங்கத்தின் நோக்கம் என்ன? தெளிவில்லை.
இன்றைய சூழ்நிலையில் எந்த பொதுநல வாதியிடமும் சுயநலம் இல்லாமல் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நமதூரிலேயே நானறிய எதிர்கட்சியாக இருக்கும் போது ஊழலை பற்றி வாய் கிழிய முழங்கியவர்கள் நமது ஊரை ஆளும் நிர்வாகம் கையில் கிடைத்ததும் செய்த ஊழல்கள் மலையை விட பெரிது. தற்போதைய பொதுநலவாதிகள் இப்படித்தான்.
நம் பாரத திருநாட்டில் சிறுபான்மயினராகிய
நாம் தனித்து எதையும் சாதிக்கவும் முடியாது, சந்திக்கவும் முடியாது. இருக்கும் கெட்டவர்களில் எவர் நமக்கு அதிகம் கெடுதி இல்லாதவர் என சார்வதே புத்திசாலித்தனம்.
ஊழலை ஒழிப்பேன் என வரிந்துகட்டிய திரு கெஜ்ரிவால் கூட கொஞ்ச நாள் பதவி சுகத்திற்கு ஊழல் கட்சி என அவரே முத்திரை குத்திய காங்கிரசின் தயவை நாடித்தான் ஆட்சியில் அமர்ந்தார். ஒன்றும் சாதிக்க முடியவில்லை திரும்பவும் தேர்த்தல் என நம் வரிப்பணம் தான் வீணாகிறது.
ஆக தற்போதைய சூழ்நிலையில் சிறுபான்மையினராகிய நாம் ஒன்று சேர்ந்து நம் பொது எதிரி தலையெடுக்காமல் தட்டுவதே புத்திசாலித்தனம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross