Re:...அரபு நாட்டு ஆசைக்கு வடிகால் அமைத்து தந்தவர் posted bymackie noohuthambi (chennai)[15 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35307
அது 1980... இளைஞர்களின் கனாக் காலம்..... எல்லோரும் அரபு மண்ணை மிதிக்க மாட்டோமா அங்கே ஒரு வேலை கிடைத்துவிடாதா, நமது துன்பங்கள் தீராதா... அங்கு சென்றால் ஹஜ் உம்ரா செய்யும் பாக்கியமும் கிடைக்குமே என்று என் போன்றவர்கள் ஏங்கி நின்று பம்பாய் நகருக்கு கூட்டம் கூட்டமாக படை எடுத்து சென்ற காலம்.
பாஸ்போர்ட்டுக்கு அவர் வைத்த பெயர் "அட்டை". அவர் எங்களை நிற்க சொல்லும் இடம் "தொகுதி". அட்டையை கொண்டு தொகுதிக்கு வா என்று அவருக்கே உரித்தான மிடுக்குடனும் தோரணையுடனும் சொல்லும்போது நாங்கள் ஆடிப் போவோம். அத்தனை ஆஜானுபாகுவான தோற்றம். அவர் அனுப்பி வைத்தவர்கள் சவுதி அரேபியாவில் வாழ்ந்து பெரும் பதவிகளில் இருந்தார்கள் என்று சொல்லாவிட்டாலும் பல ஏழைகள் வீடுகளில் அவர் விளக்கேற்றி வைத்தவர் என்பதை சொல்லாமல் இருக்க முடியாது.
அவர் என்னையும் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தபோது, நான் சம்பளம் காணாதே என்றேன். "அடே, சம்பளத்தை பார்க்காதே, உனக்கு கிடைக்கும் POSTடைப் பாரு" என்றார். நான் சற்று தயங்கியதால் அவர் எனது இடத்தை வேறு ஆளுக்கு கொடுத்தார். நான் பிறகு அவர் சொல் கேட்காமல் விட்டு விட்டேனே என்று வருத்தப்பட்ட காலங்கள் உண்டு. அவருடன் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருக்கும்போது இதை எல்லாம் சொல்லி சகஜமாக பேசிக் கொள்வோம்.
எங்களுக்குள் சில பிரச்சினைகள் ஏற்பட்டதுண்டு. ஆனாலும் நாங்கள் மோதிக் கொண்டதில்லை. சுமுகமாக அதை தீர்த்துக் கொள்ள மர்ஹூம் உவைஸ் ஹாஜி துணை நின்றார்கள். எங்களுக்கிடையே இருந்த நல்லிணக்கத்தை பார்த்து அவர்கள் வியந்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, நல் அமல்களை பொருந்திக் கொண்டு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. ஒரு பாசமுள்ள தந்தையை குடும்ப தலைவரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross