கண்ணியமிகு ஊர் தலைவர்களில் ஒருவரும் எனது ஆருயிர் நண்பன் முஹம்மது சலீமின் அன்பு தந்தையுமாகிய ஹாஜி பாதுல் அஷ்ஹாப் அவர்கள் காலமான செய்தி மனதை கனக்க வைக்கிறது. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
அவர்கள் வீட்டிற்க்கு போனால் தன் மகனின் தோழன் என்ற முறையில் அன்பான உபசரிப்புடன்,தன வீடிலுள்ளவர்களிடமும் சலீமுடைய தோழன் சுல்தான் வந்திருக்கிறான் என்று பிரியத்துடன் பிரபலபடுத்தி அத்தனை பேர்களிடமும் அறிமுகபடுதுவதையே வடிக்கையக்க கொண்ட குணத்திற்கு சொந்தமாக திகழ்ந்தவர்!
ஒரு குடும்பம் எவளவு பெரிதாக பரந்து விரிந்திருந்தாலும் அத்தனைக்கும் ஒரு தலைமையின் கீழ்தான் எல்லோரும் இயங்க வேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்துணர்த்திய தலைவராக இறுதிவரை வாழ்ந்து கொண்டிருந்தவர்!
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால்தான் நண்பன் சலீமுடன் சுமார் இரண்டுமணி நேரம் வரை தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தோம்,பேச்சின் பெரும்பாலான நிமிடங்களில் தன தந்தையின் பல பெருமைகளையும், அவர்களின் அந்தக்கால உழைப்பினையும் அதனால் உயர்ந்தெழுந்த நிர்வாகங்களையும்,ஒரு திடமான தலைமையின் குடும்ப கோலோட்சித்திறமையையும் அதனால் அனைத்து வாரிசுகளும் பெற்ற அனுபவங்களையும் அழகாக சொல்லிக்காட்டி அகம் மகிழ்ந்து அவர்களுக்கு நான் மகனாய் பிறந்ததற்கு குடுத்து வைத்திருக்கனும் சுல்தான் என்று மெத்தப் பெருமையுடன் கூறிய வார்த்தைகள் இக்கணமும் என் செவி மடலை தட்டுகிறது!
நமதூரைப்பொருத்தவரை பல பிரச்சனைகளுக்கு ஒரு வடிகால் தீர்வு கூறும் தலைமைகளில் ஒரு தலைமையை நாம் இழந்துவிட்டதாகவே உணர்கிறேன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.ஆமீன்!
மர்ஹூம் அவர்களின் பிரிவுத்துயரில் வாடும் அவர்களின் உற்றார்,உறவினர் குறிப்பாக எனதருமை நண்பன் சலீம் ஆகியோருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை அவர்களின் உள்ளத்தில் பதித்தருள்வானாக ஆமீன்!
மர்ஹூம் குடும்பத்தார்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் கலந்த ஆறுதலையும் ஸலாத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்! அஸ்ஸலாமு அழைக்கும்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross