சிறந்த சமூக சேவகர் !!! posted byM.S.Kaja Mohideen Mahlari (Singapore)[16 June 2014] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 35378
السلام عليكم ورحمة الله وبركاته
அல்ஹாஜ் பாதுல் அஷ்ஹப் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் . ஒரு சிறந்த தொழிலதிபரும் , சிறந்த சமூக சேவையாளரும் ஆவார்கள் . மஹ்லராவின் தலைவராகவும் , முஸ்லிம் லீக்கின் தலைவராகவும் பல சமுதாய சேவையாற்றியுள்ளார்கள். பொது நிறுவனங்கள் , மார்க்கப் பணியாற்றும் நிறுவனங்களுக்கு என பொருளாதார உதவி செய்த வள்ளல் பெருந்தகை ஆவார்கள் . 1987 ம் வருடம் கல்கத்தாவில் உள்ள அவர்களின் மரைக்கார் இன்டஸ்ட்ரீஸ் கம்பெனியில் ரமளானுக்காக தராவீஹ் தொழுகை, பயான் நிகழ்ச்சிக்காக நான் சென்ற போது அங்கு வந்திருந்த அவர்கள் மிகவும், அன்பாகவும், உபசரிப்பாகவும், மார்க்க விசயங்களை கலந்துறவாடுவது என மிகவும் அன்பாகவும், பாசமாகவும் இருப்பார்கள் .
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று , அன்னாரின் குற்றங்கள் , குறைகளை மன்னித்து , அன்னாரின் கப்ரை ஒளிமயமாக்கி , அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைத்து அண்ணல் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்களின் அசல் பாகத்தில் குடியமர செய்வானாக !
للهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه
மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக, அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் நல்ல பொறுமையையும் , நிறைந்த நற்கூலியையும் தந்தருள்வானாக !!!ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross