Re:... posted bykulam mohamed younus (Bangalore)[16 June 2014] IP: 110.*.*.* India | Comment Reference Number: 35395
நெருங்கிய பக்கத்து வீடு போல் அல்லாமல் ஏதோ நெருங்கிய சொந்த கார வீடும் போல் நடந்து கொள்ளுவார்கள் அப்பா அவர்கள்... பாதுல் அஷ்ஹாப் ஹாஜி அவர்கள்...
நான் சிறு வயதாக இருக்கும்போது அவர்களும் அவர்கள் மக்களும் ஒவ்வொரு தடவையும் பயணம் செல்லும்போது தவறாமல் என் கண்ணும்மாவிடம் சொல்லிவிட்டு துவா இறைஞ்சு விட்டு செல்லுவார்கள்... என் தந்தையார் இறந்தபோது என்னை ஆற தழுவி அப்பா அவர்கள் ஆறுதல் சொன்னது இன்னும் மனதில் நிற்கிறது....
ஒரு இளைஞ்சரை போல் மிகவும் தைரியம் உள்ளவர்கள்.... அவர்களின் தைரியத்தை நான் பல தடவை நேரில் பார்த்து இருக்கிறேன்.. அவர்கள் பிறந்த, இருந்த பகுதியை பின்பற்றி... ஒன்று தோல் வியாபாரியாக அவர்கள் உருவாகி இருக்க வேண்டும்... இல்லை என்றல் மாணிக்க கல் வியாபாரியாக மாறி இருக்க வேண்டும்... இரண்டுமே இல்லாமல் அப்போது இருந்த லோக்கல் வியாபார சூழ்நிலைகளுக்கு முற்றிலும் மாற்றமாக தான் பெற்ற பட்ட அறிவை மட்டும் வைத்து தொழிற்சாலையை நிறுவி அதில் மிக பெரிய வெற்றியை கண்டவர்கள்.... இறைவனை மட்டுமே நம்பி மக்கள் செல்வத்தையும் பெற்று கொண்டார்கள்...
"காக்கா" மௌத்தாகி விட்டார்கள்.... "மாமா" மௌத்தாகி விட்டார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கும் இன்றைய சூழ்நிலையில் .... இன்று "அப்பா" மௌத்தாகி விட்டார்கள் என்று சொல்லி கொள்ளும் அளவிற்கு அல்லாஹ் அவர்களுக்கு ஒரு நீண்ட ஆயுளை கொடுத்து இருந்தான்...
எனினும் எல்லோரும் ஏதோ ஒரு காலத்தில் எவ்வாறாயினும் இறைவனிடம் செல்ல இருப்பவர்கள்தாம்..... இன்று இவர்கள் நாளை நாம் என்று சொல்லி கொள்ளும் காலம் எல்லாம் கடந்து.... இப்போது எல்லாம்.... இந்த நிமிடத்தில் இவர்கள்.... அடுத்த மணித்துளியில் நாம் என்ற நிலைமை தான் இன்று உள்ளது...
ஆனால் எப்போது சென்றாலும் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாராக,,, வேதனைகள் செய்யப்படாத அடியாராக ,சுவர்கத்தின் பால் தீர்ப்பு சொல்லப்பட்ட அடியாராக இறைவன் அவனின் பால் நம்மை அழைக்க வேண்டும் .. அதே பிரார்தினையை அப்பாவின் மறுமை வெற்றிக்கும் இறைஞ்சுவோம்! ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross