எங்களது பிரியமும் பாசமும் நிறைந்த அருமை ஜமில் சிராஜ் மச்சான் அவர்களின் மறைவு செய்தி , நிச்சயம் எங்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் மிக பெரிய ஒரு இழப்பு ஆகும்.
அவரின் என்றும் புன்னகை மலர்ந்த முகம் , மிக பெரிய தாராளமான ஈகை குணம் நிறைந்த அவரது இதயம் , எல்லோருடனும் மரியதையுடன் பழகும் அவரது இயல்பு.
அவ்வளவு எளிதில் எங்களால் அவரது மறைவை தாங்கி கொள்ள இயலாது என்றாலும் , வல்ல நாயனின் முடிவே இறுதியானது , முடிவானது என்ற நிலையில் நாங்கள் எங்களை சபூர் செய்து கொள்கிறோம் . வல்ல அல்லாஹு எனக்கும் , எங்களது குடும்பத்தில் அனைவர்களுக்கும் , அவது பிரிவை தாங்கும் சக்தியையும் , அழகிய சபூரையும் தருவானாக . ஆமீன் ,
வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து , இந்த புனிதமான ரமழான் மாதத்தின் பொருட்டால் மர்ஹூம் அவர்களுக்கு , அவனது பொருத்தம் நிறைந்த நலடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைத்து , மேலான சுவனபதியை கொடுத்து
அருள்வானாக . ஆமீன் ,
அவரை இழந்து வாடும் எங்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது இனிய சலாதினை தெரிவித்து கொல்கிறேன் . அஸ்ஸலாமு .. அழைக்கும் . (வரஹ்)..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross