இன்னலில்ல்லாஹி வ இன்னா இலஹி ராஜஹூன்!. posted byமுஹம்மதுஆதம் சுல்தான்! (YANBU)[02 July 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35723
இன்னலில்ல்லாஹி வ இன்னா இலஹி ராஜஹூன்!
மர்ஹூம் தம்பி சிராஜிதீனைப்பபற்றி அதிகமான நேரடி பழக்க மில்லாதவன் ,தம்பி s.k சாலிஹ் கூறியதுபோல் மர்ஹூம் சிராஜ் அவர்கள் தங்கள் உற்றார் உறவினர் களுக்கு மட்டுமல்லாது தங்கள் தெரு ஜமாத்து வாசிகளுக்கும் பல உதவிகள் செய்து அவர்கள் வாழ்கையை உயரோங்க செய்த உத்தம குணமுள்ளவர் என்பதை செவிவழி செய்திகளாக செவியுற்றிருக்கிறேன்!
அப்படிப்பட்ட ஈகையுள்ளம் கொண்டவரை எல்லாம் வல்ல அல்லாஹ் அவன் இடத்திற்கு அழைத்திருக்கும் கட்டளைக்கு
நாம் அனைவரும் அடிபணிந்தே ஆகவேண்டும்!
வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஆகிரத்தில் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!
அன்னாரின் பிரிவுத் துயரத்தில் துவளும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் குறிப்பாக நண்பர் யூனூஸ் அவர்களுக்கும் வல்ல அல்லாஹ் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்!.
மர்ஹூம் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆறுதல் அடங்கிய ஸலாத்தினைதெரிவித்துக்கொள்கிறேன்! அஸ்ஸலாமு அழைக்கும்!
வேதனையுடைய பின் குறிப்பு: தம்பி SK ஷாலிஹ், தம்பி சலீம் ஆகியோர் கூறியதுபோல் இன்னும் எத்தனை உன்னதமான உத்தமமான உயிர்களை இக்கொடிய நோயினால் இழக்கப்போகிறோம் யா அல்லாஹ்!
அன்பு காயல் கண்மணிகளே இக்கொடிய துயரத்திற்கு
ஒரு முடிவு பிறக்குமுகமாக வீட்டிற்க்கு இருவர் அல்லது ஒருவரேனும் இக்கொடிய நோய் மற்றும் நச்சுத்தன்மை விஷக்கிருமி எதிர்ப்பு இயக்கத்திற்கு உதவியாகவும் ஒற்றுமையாகவும் இருந்து அவர்களுக்கு ஒத்துழையுங்கள் அந்த இயக்கத்தினர்கள் இரவு பகல் பாராமல் தங்கள் எல்லா நலன்களையும் துறந்து தியாக உணர்வுடன் பல முயற்சிகளில் முனைந்திருக்கிறார்கள்!
இதுபற்றி என்னுடைய முந்திய ஒரு கருத்துப்பதிவில் அக் கருத்தை முடிக்கும் பொழுது "குதித்துக்கிளம்பும் கண்ணீரை கட்டுப்படித்தியவனாக"என்று முடித்திருந்தேன்,அந்த உணர்வுதான் உண்மை .ஏனெனில் இக்கொடிய நோயினால் பல உறவினர்களையும், உற்ற நண்பர்களையும் இழந்துவிட்ட காயம் அந்த புண் ஆறியபாடில்லை,சிகப்பு ரணமாய் எம்மைப்பார்த்து எக்காளமிட்டுக்கொண்டிருக்கிறது இன்னும் எத்தனை உயிர்களைக்காவு கொள்ளுமோ என்ற கதிகலக்கதுடன் தான் காலத்தை இக்காயல்பதியினர் கடக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.
அல்லாஹ்வின் பாதுகாப்பை நாடியவனாக,
ஆதம் சுல்தான்! .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross