'நஃப்சுல் முத்மயின்னா' வாக இவர் ஆன்மாவை வானவர்களைக் கொண்டு வாழ்த்துக்கள் கூறி வரவேற்பானாக...!!! posted byS.K.Shameemul Islam (Chennai)[02 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35742
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
சரியாக ஜூன் 1-ந் தேதி தீவுத்தெருவில் அவரைக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. புகாரிஷ் ஷரீஃபுக்கு சென்று கொண்டிருந்தார். சுகம் விசாரித்த போது மெல்லிய புன்னகையுடன் நன்றாக உள்ளேன் துஆ செய் என்றார். அப்போது அவரது முகத்தில் ஓடிய கவலை ரேகை என்னை மிகவும் வாட்டியது.
ஏதோ மனிதர் இறையருளால் நோயை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிக் கொண்டிருக்கிறார் என மனதில் நினைத்தவாறு நோய்கள் அகன்று இன்னும் அதிக காலம் வாழ அல்லாஹ்விடம் அவருக்காக துஆ செய்தேன்.
ஆனால் இவ்வளவு சீக்கிரம் நமக்கு விடை கொடுப்பார் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
இவரது முஹல்லாவில் நானும் ஒருவன். இவர் தந்தையை அறியாத முஹல்லா வாசிகளோ ஹாங்காங் வாழ் கயலர்களோ இருக்க முடியாது. அவர்களின் சேவை மனப்பான்மையை இவர் அப்படியே உள்ளிழுத்துக் கொண்டு அனைவருக்கும் தாராளமாக உதவி செய்து தொழில் துறைகளில் பலருக்கு வழிகாட்டி பிறர் அறியாமல் பலருக்கு உதவி செய்து நற்செயல்கள் பலவற்றுடன் தனது இரட்சகனை சந்திக்க புறப்பட்டிருக்கிறார்.
கருணையுள்ள ரஹ்மான் இப்புனித மாதத்தில் தன்னை சந்திக்க வரும் இந்த நல்லடியாரை பொருந்திக் கொள்வானாக, இவரது பாவங்களை மன்னித்து உலகில் இவர் அடைந்திராத பல பேறுகளை மண்ணரை வாழ்விலும் மறுமையிலும் பெற்றிட துணை புரிவானாக.
'நஃப்சுல் முத்மயின்னா' வாக இவர் ஆன்மாவை வானவர்களைக் கொண்டு வாழ்த்துக்கள் கூறி வரவேற்பானாக.
உயர்ந்த சுவனச் சோலையாகிய ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் இவரை பிரவேசிக்கச் செய்வானாக.
உயர்ந்தோன் அல்லாஹ் இவர் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர், தெருவாசிகள், முஹல்லாவாசிகள், நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.
நீங்கா துயருடன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
& குடும்பத்தார்.
காயல்பட்டணம், சென்னை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross