யா அல்லாஹ் ..கருணையாளனே ...இவர்களை காப்பாற்று ,,என உள்ளம் உருகுகிறது உண்மை !
கொஞ்சநேரம் அவனுக்கு நன்றியும் செலுத்துகிறது .."இப்படிப்பட்ட அமளி துமளியில் ,இல்லாமல்,,நம்மை அமைதியாக சாப்பிடவைத்து ,,தூங்கவைத்து,,அமல் செய்ய வைத்து ,,வைத்திருக்கிறானே ,"',என நன்றியால் நனைகிறது உள்ளம் !
அல்ஹம்துலில்லாஹ் !
அவனன்றி ஓர் அணுவும் அசையாது ,,என நம் எல்லோருக்கும் தெரியும் ,!
அப்படியானால் ,,அவன் நாடித்தான் இதெல்லாம் நடக்கிறது !
இதன் சூட்சுமம் அவனன்றி யாருக்கு தெரியும் ?
புனிதமான இந்த ரமளானில்,,,உடல்கள் சிதைந்து ,,கிடக்கும் இளம் பிஞ்சுகளின் ,,நிலை அவனுக்கு தெரியாதா ?
அல்லாஹ் கொடுமைக்காரன் இல்லையே !
அவன் ரஹ்மான் ,,ரஹீம் அல்லவா ?
ஒரு தாயுள்ளமான ,எனக்கே இவ்வளவு கண்ணீரும் ,,சோகமும்,,என்றால் ...எழுபது தாய் உள்ளத்துக்கு சொந்தக்காரனான அல்லாஹ் ஜல்ல ஜலாலஹு சும்மா இருக்கிறான் என்றால் அதன் காரணம் நிச்சயமாய் வலுவாக தானே இருக்கும் ?
ஆனால் அவன் நீதியாளன் அல்லவா ?
அவன் நீதிமன்றத்தில் ,,கொடுத்த தீர்ப்பு ,,அதன் விளைவு ,,,இப்படி என்றால் ,,,பாதிக்கப்பட்டவர்களின் ,முந்தைய ,நிலை என்ன என்பது நமக்கு தெரியாது அல்லவா ?
ஆகவே ..நாம் நம்,சகோதர முஸ்லிம்களுக்கு ,பாவ மன்னிப்பு கேட்டு அழுவதுதான் இப்போதைக்கு நல்லது !
யூதர்களை அழித்துவிடு ..என கேட்க்க நமக்கு உரிமை இல்லை !
அவர்களில் யாருக்கு அவன் ஹிதாயத் வழங்க நாடி இருக்கானோ ,,தெரியவில்லை !
அவர்கள் சந்ததிகளுக்கு ,,ஹிதாயத் வழங்க நாடி இருக்கானோ ,,அல்லாஹ் அஹ்லம் !
அகவே ,,நம் யாருக்கும் சாபம் விடாமல் ,,பாவமன்னிப்பு கேட்ப்போம்...சீக்கிரம் இந்த நிலை மாற மனதார துஆ செய்வோம் !
இப்படி ,மரணித்தவர்கள் ஷஹீத் என்ற மாபெரும் அந்தஸ்து ,பெறுகிறார்கள் ,,!
இந்த அந்தஸ்து கிடைக்க அவர்கள் கேட்ட துஆ கூட காரணமாய் இருக்கலாம் அல்லவா ?
நாம் ,,இந்த ரணகளத்தை பார்த்து ,",பாவம் "என்று கூட சொல்ல கூடாது ...அல்லாஹ்வை கொடுமைக்காரன் ..என்ற பட்டம் கொடுத்ததுபோல் ஆகிவிடும் !
உங்கள் வார்த்தைகளை கவனமாய் கையாளுங்கள் துஆ கேட்க்கும்போது !
யா அல்லாஹ் ,,எங்கள் சகோதரர்கள் ஆன,,,பலஸ்தீனியர்கள் செய்த குற்றம்,,,எல்லாம் உனக்குத்தான் தெரியும்.!
அவர்கள் பாவங்களை மன்னித்துக்கொள் ரப்பே !
உன் நேசர்களான ,,நபிமார்கள் வலிமார்கள் ,பொருட்டால் ,,அவர்களை பாவத்தில் இருந்து மீட்டுவிடு ரப்பே !
அவர்களை பார்த்து ,நாங்கள் எங்கள் மனதை திருத்தி,,பாவங்கள் செய்ய அஞ்சி,,,உன் தக்வாவை ,,நிறைத்துக்கொண்டோம் ...!
எங்களையும் மன்னித்துக்கொள் ரப்பே !
உன் படை வீரர்களான பத்ரியீன்கள் பொருட்டால் அவர்களை ,,மன்னித்து விடு !
அகில உலக ,,ரெட்ச்சகர் ,,அவனி புகழ் நாயகர் ,,கண்மணி நாயகம் பொருட்டால் ,,அவர்கள் பாவங்களையும் ,எங்கள் பாவங்களையும் மன்னித்து எங்களுக்கு பாதுகாப்பு கொடு ,,என உளம் உருகி ,,கேளுங்கள் ,,விரைவில் பலன் தெரியும் அன்பர்களே !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross