எனது பாசத்திற்குரிய சகோதரர்களான சாளை சலீம், சாளை ஹுமாயூன் மற்றும் சாளை நவாஸ் ஆகியோரது கம்மா அவர்களின் மரணச் செய்தி அறிந்து வருந்தினேன்.மர்ஹூமா அவர்களின் அளவிற்கு நமக்கு ஆயுள் இருக்குமா எனில் உறுதியாகச் சொல்ல இயலாது. வாழ்ந்தார்கள், வாழ வைத்தார்கள் வாயில் கலிமாவுடன் நாயனின் நாட்டப்படி பிரிந்து சென்று விட்டார்கள்.
பேரப்பிள்ளைகளில் பிகவும் உகப்பான பிள்ளை முதல் வந்த முத்து மூத்த வாரிசான சாளை சலீம் காக்கா மீது கம்மாவுக்கு தனி பிரியமும், பாசமும் இருந்ததாகக் கேள்வியுற்றேன். இரு தினங்களுக்கு முன்னர் தான் ஹுமாயூன் ஊரிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு வந்தார். சாளை சலீம் அவர்கள் ஊரிலேயே இருந்ததால் உகப்பான பிள்ளைக்குதான் கம்மாவின் இறுதி கடமைகளைச் செய்யும் பாக்கியம் கிடைத்துள்ளது. சுப்ஹானல்லாஹ்!
வீட்டுக்கு ஒரு மரம்போல விருட்சமாய் நிழல் தந்த மூதாட்டியின் பிரிவை ஏற்பது கடினம்தான் இறைவனின் கட்டளை அழைத்துக்கொண்டான் என மேலான சபூருடன் அவர்களுக்காக துஆ செய்யுங்கள். குடும்பத்தார் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சலாம்.அஸ்ஸ்லாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி . வ பரக்காத்துஹு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross