நினைவாற்றல் மிக்கவர்... posted byS.K.Salih (Kayalpatnam)[11 August 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36343
ராபியா கம்மா அவர்களை, அவர்களது பேரன் சாளை நவாஸ் காக்காவுடன் சென்று ஓரிரு முறை அவர்களது இல்லத்தில் கண்டு பேசியிருக்கிறேன்.
தள்ளாத வயதிலும் நினைவாற்றல் சிறிதும் குன்றாதவர்களாகத் திகழ்ந்தார்கள். “இந்தப் புள்ள யாரு?” என்று கேட்டார்கள். “இன்னார், இன்னார்” என என் குடும்பத்துப் பெரியவர்களின் பெயர் சொல்லி, அவர்களது மகளார் - சாளை ஸலீம், ஹுமாயூன், நவாஸ் காக்காமார்களின் தாயார் சொன்னார்கள். உடனடியாக, என் குடும்பப் பூர்விகத்தையே பிடித்துக்கொண்டார்கள். பின்னர் என்ன? என் குடும்பம் சார்ந்த பெரியவர்களோடு அவர்களுக்கிருந்த தொடர்புகள், கொடுக்கல் வாங்கல்கள், குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் என நிறைய பேசினார்கள்.
நல்லதொரு குடும்பத்தின் மூத்த தலைவியாகத் திகழ்ந்த நினைவாற்றல் மிக்க அப்பெண்மணி இன்று நம்முடன் இல்லை. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு சாளை காக்காமார்கள் உள்ளிட்ட - மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்
அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross