அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[18 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36509
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்,என்ற தத்துவ பழமொழிக்கேற்ப,திரும்ப திரும்ப் என் முந்திய கருத்துப் பதிவையே மறுபடியும் பதிப்பதோடல்லாமல்,நம் பகுதி மக்களை மன்றாடிக்கேட்பது ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் செயல்படுங்கள்,எப்படிப்பட்ட எட்டாத இடத்தில இருக்கும் எந்த செயலுக்குறிய தீர்வும் எளிதாக முடியும்,அதற்குறிய
ஒரே ஆயுதம் நம்மிடையே இருக்கவேண்டிய ஒட்டுமொத்த
ஒருங்கிணைனைந்த ஒற்றுமையும் ,ஓரிறைவனின் உறுதிமிக்க நம்பிக்கையும்தான்!
(என் முந்தியகருத்தை மறுபடியும் பதிவு செய்கிறேன் மன்னிக்க!)
காயல் வாசி மக்கள் மட்டுமே, மாசுகட்டுபாடு கட்டுக்கடங்க்காமல் கரைபுரண்டோட காரணமாக இருப்பதற்கு DCW முக்கியகாரணம் என்று முழுமையாக எங்களையே குறிவைத்து தாக்குகிறார்கள்.என்று நம் ஆதார குற்றச்சாட்டை குறைகூறி மறுத்தும், மழுப்பியும் வந்த DCW நிர்வாகம், தற்போது பல பத்திரிக்கைகள் இந்த அவலத்தை உண்மை நிலையை உலகறியவெளிச்சச்ம்போட்டு காட்டிக்கொண்டிருக் கிறார்களே, இதற்க்கு இந்த நிர்வாகம் என்ன சொல்கிறது.
ஆகவே அன்பு காயல் மக்களே இந்த நிர்வாகத்தால் பாதிப்புக்குள்ளான நமது பகுதி மக்கள் மட்டுமல்லாது பல ஊடக சக்திகளும் சேர்ந்து எதிர்த்து கொண்டே இருந்தால்தான் மிகப்பெரிய இந்த நிர்வாகத்தை ஓரளவாவது உணரவைக்க முடியும். அடிமேல் அடி அடித்தால்தான் அம்மியும் நகரும் என்கின்ற உணர்வுபூர்வமான பழமொழிக்கேற்ப நாம் அனைவர்களும் ஒரே அமைப்பான "KEPA " வின் கீழ் ஒற்றுமையாக ஒரிங்கிணைந்து தொடர்ந்து நம் எதிர்ப்பை தெரிவித்து போராடிக்கொண்டே இருப்போமாக!
வல்ல இறைவன் நம் முயற்சியை வெற்றியாக்கித்தந்து நமதூர் மற்றும் நம் அண்டைய பகுதி மக்களையும் காப்பாற்றி காவல் புரிவானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross