Re:...அடி வயிற்றில் அமிலம் சுரக்கிறது posted bymackie noohuthambi (chennai)[20 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36533
அப்துல் ஹமீது அவர்களின் ஆக்கம் அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் மிக பெரிய சமூக இழுக்கு.
சூரியாவைப் போல் மாப்பிள்ளை வேண்டும் என்று சொன்னது கூட ஆச்சரியம் இல்லை. தான் ஜோதிகா போல் இல்லையே என்று தன்னை தானே நொந்து கொள்கிறாளே - சிவகார்த்திகேயன் போல் மாப்பிள்ளை வேண்டும் என்று சொன்னது ஆச்சரியம் தரவில்லை - "ஐயோ உசிரு" என்று உருகி நெளிந்தாள் என்கிறீர்களே, நவூது பில்லாஹ். இத்தகைய பெண்கள் நாவில் கலிமா எப்படி வரும்.
விஜய் டிவி யில் நீயா நானா, லக்ஷ்மியின் உண்மை சொல்கிறேன் இன்னும் பல நிகழ்ச்சிகள் வீட்டின் அந்தரங்கங்களை அம்பலத்தில் அலசும் தெப்பக்குளமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன, அதற்கு ரசிகர்கள் வட்டம் அதிகம். கலாசார சீரழிவுக்கு வெள்ளி திரை கால்கோள் விழா நடத்தியது என்றால் சின்னத்திரை அதற்கு திறப்பு விழா செய்தது. இந்த உண்மையை சொல்லப் போனால் சீமான்கள் கொதித்து எழுவார்கள் - கமலா ஹாசன்கள் விசுவரூபம் எடுப்பார்கள்.ஊடகங்கள் நம் உயிருக்கு விலை வைப்பார்கள். அவர்களின் தொழில் இதுதான். கொலை கொள்ளை பாலியல் வன்முறை வன்கொடுமை தற்கொலை இவைகளின் ஊற்றுக் கண்ணே வெள்ளித்திரையும் சின்னத்திரையும்தான் இது இல்லாத சேனல் ஏது. இரவு 12 மணிக்கு மேல் ஒரு சேனல் adults only 16வயதை தாண்டியவர்களா adults ?
"16 வயதான பின்னாலே எல்லோர்க்கும் மலரும் காதல் அதிசயம்..அதிசயமே அசந்து விடும் நீ எந்தன் அதிசயம்" என்று எப்போது ஒரு பாடல் வெளி வந்ததோ அப்போதே இந்த கும்மாளங்கள் ஆரம்பித்து விட்டன. கொழுந்து விட்டும் எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக நம் இஸ்லாமிய சமுதாய பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்..
இதற்கு காரணம் ஆண்கள்தான்.
இப்போதெல்லாம் வீட்டில் தொழுகை இபாததுக்கள், சமையல் வேலைகள் என்று இருக்கும் பெண்களை நாம் மணப் பெண்களாக தேர்ந்தெடுப்பதில்லை. பெண் என்ன ஓதி இருக்கிறாள் ஐவேளை தொழுகை தொளுகிராளா , நோன்பு வைக்கிறாளா என்று கேட்பதில்லை. எடுத்த உடன் என்ன படிக்கிறாள் என்று கேட்கிறோம். SSLC படித்து விட்டு உம்மாக்கு உதவியாக இருக்கிறாள் என்றால் நாம் நாக்கை சப்பிக் கொள்கிறோம், படிப்பு இல்லையாமே, அப்ப வேற பொண்ணை பாரு உம்மா என்று சொல்கிறோம்.
நான் ஒரு பெண்ணை பார்த்து பேட்டி கண்டு எனது மருமகனுடைய மகன் இஞ்சினியர்(அப்படி ஒன்றும் அழகோ, பெரிய சம்பளமோ இல்லை). அவனுக்கு அவளது போட்டோவை அனுப்பினேன். வீட்டில் எல்லோரும் சம்மதம், அடக்க ஒடுக்கமான பெண், மார்க்க பக்தியுள்ள பெண். இவர் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா, எனக்கு பெண்ணை பிடிக்கவில்லை, நான் நினைக்கிற மாதிரி பெண் இல்லை. நீ நினைக்கிற மாதிரி என்றால்.? என்னுடன் ஒன்றாக வரவேண்டும். வேலை பார்க்க வேண்டும் etc etc பெண்ணை cancel செய்தோம். பெண்ணின் பெற்றோர் மனம் என்ன பாடு பட்டிருக்கும். இது எனது அனுபவம். இப்படி எத்தனை பேருக்கு அனுபவங்கள் இருக்கும்.
இந்த நிலைமைக்கு மத்ரசாவையோ மக்தப்களையோ குறை சொல்லுவதில் அர்த்தமில்லை. அவர்கள் இஸ்லாமிய வாழ்க்கை முறையை சொல்லிக் கொடுக்காமல் இல்லை, கதீஜா நாயகி ஆயிஷா நாயகி இன்னும் உம்முஹாதுல் முமிநீன்கள் - நபிகள் நாயகம் திருமண விஷயங்கள் சொல்லப் படாமல் இல்லை. இதை எல்லாம் மீறி ஒரு நவீன கால சக்கரத்தின் சுழற்சியின் அடியில் சிக்கி தவிக்கிறது இந்த சமுதாயம்.
விழிப்புணர்வு கலந்துரையாடல்கள்- பெண்கள் மத்தியில் நடத்தப் பட வேண்டும் இணையதளங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள். உங்கள் ஆக்கம் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டும்படி ஒரு booklet அடித்து கொடுக்கப்பட வேண்டும். பெண்களின் கருத்துக்கள் கோரப்பட வேண்டும். இதற்கு நிறைய முயற்சிகள் தேவைப் படுகிறது.
நமது இஸ்லாமிய சேனல்களில் இவற்றைப் பற்றிய கருத்துக்கள் பரிமாறப் பட வேண்டும். தீர்வுகள் முன்வைக்கப் பட வேண்டும். இஸ்லாமிய சேனல்களில் வரும் செய்திகள் வெறும் விவதாங்களாக மாறி, ஆளுக்கு ஆள் கேள்வி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் நிலை மாற வேண்டும். நிதர்சன உண்மைகள் இந்த மாதிரி சமூக அவலங்கள் அலசப் பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் நெஞ்சுருகி து ஆ கேட்க வேண்டும். அல்லாஹ் உங்கள் நல்ல முயற்சிகளுக்கு எல்லோரும் துணை நிற்க அருள் புரிவானாக. உங்கள் உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.என்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருக்கிறேன்.
"நீ நடப்பதற்கு பாதை தேடாதே, நீ நடந்தால் அதுவே பாதையாகும்" என்று ஒரு அறிஞர் சொல்கிறார். தீர்வு உங்கள்டமிருந்து ஆரம்பிக்கட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross