Re:...கூச்சல் குழப்பம் நிறைந்த ஆயுதம் இல்லாத ஆயுத எழுத்து posted bymackie noohuthambi (chennai)[02 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36958
கட்டுரை ஆசிரியர் அவர்களின் கூற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. புதியதலைமுறை வார இதழை படிக்கும் பழக்கம் உள்ளவன் நான். அது தொலைக் காட்சி உலகில் காலெடுத்து வைத்தபோது அதையும் ரசிக்க ஆரம்பித்தேன்.
நேர்பட பேசு, ரவ்த்திரம் பழகு, அக்னி பரீட்சை புதிய பார்வை ஓடி விளையாடு இப்படி பல நிகழ்ச்சிகள் மனதுக்கு ரம்மியமான நிகழ்ச்சிகள். ஆனால் இந்த நிகழ்ச்சிகளில் நேர்பட பேசு மிகவும் பிடிக்கும். நீங்கள் சொல்லும் காட்டு கூச்சல் இங்கும் தலை விரித்தாடுகிறது.
ஒருவர் பேசும்போது அடுத்தவர் குறுக்கிட்டு பேசுவது, ஒரே நேரத்தில் பலர் பேசுவது இவை எல்லாம் சேர்ந்து நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு சலிப்பை ஊட்டுகிறது. நமது நாடாளு மன்றம், சட்டமன்றம், நகர்மன்றம் நிகழ்ச்சிகளும் இப்படித்தான் நடக்கின்றன என்பது வேறு விஷயம்.
நான் கடிதம் மூலமாக அந்த தொலைக் காட்சிக்கு இதை எழுதினேன், பதிலும் இல்லை, தொடர்ந்து இந்த கதை முடிவதும் இல்லை.ஒரு மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சியில் அரை மணி நேரம் விளம்பரம், மீதி நேரம் இப்படி வீணாக போகிறது.ஆசிரியர் அவர்கள் இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தால் நல்லது.
அடுத்து, தீவிரவாதிகள் போராளிகள் என்ற சொற்றொடர்கள், அவரவர்கள் பார்க்கும் பார்வையில் உள்ளது, நாட்டுக்கு நாடு இடத்துக்கு இடம் அது வேறுபடுகிறது. கலெக்டர் ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றபோது அவர் இந்தியர்களுக்கு போராளியாக தென்பட்டார், பிரிடிஷ்காரர்களுக்கு தீவிரவாதியாக தென்பட்டார்.
காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, நமது பார்வையில் தீவிரவாதி - RSS BAJRANG DHAL பார்வையில் போராளி.ஜாலியன்வாலா படுகொலையை கட்டவிழ்த்து விட்ட ஜெனரல் டயர் நமது பார்வையில் கொலைகாரன் கொடுங்கோலன்.ஆனால் இங்கிலாந்து அரசுக்கு போர்வீரன்.
தமிழர்களையும் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் சுட்டுக் கொன்ற பிரபாகரன் நெடுமாறன், சீமான் வைக்கோ பார்வையில் போராளி - நமது பார்வையில் தீவிரவாதி.
விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய ராஜபக்சே சிங்களவர்கள் பார்வையில் நாட்டை நேசிக்கும் தேசியவாதி - தமிழகத்தில் உள்ள இந்த தலைவர்களுக்கு தமிழின துரோகி.இப்படித்தான் ISIS இயக்கம், முஜாஹிதீன் இயக்கம் ஹமாஸ் இயக்கம், காஷ்மீர் இயக்கம்.
இதைப் பற்றி பெரிய ஆராய்ச்சியில் இறங்க தேவை இல்லை. இதை பற்றி விளக்கம் சொல்வதால் யாரும் அவர்கள் நிலையிலிருந்து அவர்கள் மாறப் போவதும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross