Re:... posted byசாளை பஷீர் (சென்னை)[29 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37922
நெஞ்சைத் தொடும் வரிகள். படங்கள் மனதை மிகவும் உறுத்துகின்றன. மனித துயருக்கு ஏது சாதியும் மதமும் ?
நமதூரில் மழை மிகத்தீவிரமாக பெய்து கொண்டிருந்த நேரத்தில் வெளியூர் சென்று விட்டு புற வழிச்சாலை வழியாக ஊருக்குள் நுழையும்போதுதான் மழையின் தீவிரத்தையும் ஆவேசத்தையும் நேருக்கு நேர் காண முடிந்தது.
நாம் குடியிருப்பது கல் வீடானாலும் கூட சுழித்தோடும் மழை வெள்ளத்தைப் பார்க்கும்போது வீட்டைப்பற்றிய அச்சம் எழுந்தது.
கல் வீட்டில் வசிக்கும் என் மனதே இப்படி பட பட என அடித்துக் கொள்ளும்போது தரவை , சீதக்காதி நகர் , சுலைமான் நகர் , அண்ணா நகர் , கற்புடையார் பள்ளி வட்டம் போன்ற பகுதிகளில் குடிசை கட்டி வாழும் மக்களை நினைத்து மனம் நெகிழ்ந்தது.
மழை விட்டு ஒரு வாரம் ஆகியும் குடிசைப்பகுதிகளில் புகுந்த மழை நீர் இன்னும் வடிந்தபாடில்லை.
கடந்த வாரம் வந்து விட்டி போன பருவகால பெருமழையானது நம் முன் சில கேள்விகளை எழுப்புகின்றது.
1. முறையான ஆவணங்களுடன் தங்களுக்கு உரிய நிலத்தில் குடிசை கட்டி வாழும் மக்களுக்கு ஏன் இது வரை பாதுகாப்பான வீடுகள் கட்டித்தரப்படவில்லை ? அரசு என்ன செய்கின்றது ?
2. நமதூரில் 55 நீர் நிலைகள் இருந்ததாக சொல்லப்படுகின்றது. அவைகள் எங்கே போயின ? கண் மண் தெரியாமல் வளர்ந்து வரும் நில மோகமும் அதையொட்டி செயல்படும் நிலம் வளைக்கும் கும்பலும் காணாமலடித்த நீர் நிலைகள் என்னென்ன / அவைகள் ஏன் மீட்கப்படவில்லை?
பிரபஞ்சத்தின் ஐம்பெரும் ஆற்றல்களில் நீர் முதன்மையானது. இயற்கையாக தேங்கும் மழை நீரும் தகுந்த வாழுமிடமின்மையால் மக்கள் விடும் கண்ணீரும் ஒரு போதும் தங்கள் தடங்கலை மறப்பதில்லை.
அவை என்றாவது ஒரு நாள் தங்களின் இடத்தை தடம் பிடித்து வரும். அப்போது அதில் அரசின் அநீதியும் நிலம் வளைக்கும் கும்பலின் பேராசையும் குப்பை போல மிதக்கத்தான் போகின்றது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross