காகிதவாழ்த்தும் பூக்களும் கொடுத்து பின்கள்ளிப்பாலூட்டி சிசுக்கொலைசெய்யும் காலமாகிவிட்ட காலச்சீரழிவில் கவர்ச்சியெனும் பெயரில் கவர்செய்யப்படாமல்வருகிறது திறந்தவெளிகளில் பிறந்தமேனிகள்பொள் இன்றைய
டீன் ஏஜ்மேனிகள். அஸ்தக்பிருல்லாஹில் அழீம்.
(நல்லதலைப்பு) "காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது"
அவனுக்காக வாங்கிய கால்சட்டை ஜிப்வைக்கப்பட்டதாக இருந்தால் அதைக்கத்தரித்துவிட்டு பித்தான்வைத்துத்தைத்துக்கொடுப்பாள் அவனுடைய தாய் அவளுக்குத்தெரியும் இல்லையென்றால் என்னபிரச்சினைவருமென்று. புதிதாக ஒருபெண்ணின்சவகாசம் கிடைத்ததும் அவகாசம்எடுக்காமல் வெடுக்கென்று அவளைப்பற்றி உனக்குத்தெரியாதென்று அந்த அன்னையைப்பார்த்துச்சொல்வான்.
அவளுக்காக அவளுடைய முதல்திங்கள் எப்போதும்வரும்,வரலாமெனக்காத்திருந்த பின் அவள்வயதைஎட்டியதும் குனிந்ததளையுடன் பேசமுடியாது கூனிக்குருகி வீட்டின்மூலையில் அமர்ந்திருந்தவளுக்கு சுத்தம்செய்து பூச்சூட்டி புத்தாடைஅணிவித்து மேடையில் அமரவைத்து சீராட்டி சிறப்புசெய்து பொத்திபொத்திக்காக்கும் திண்ணைப்பள்ளியான அன்னையைப்பார்த்து கக்குவாள் தான்புதிதாகண்ட அரும்புமீசையின் முகவரியை தன அகவரியில் பிழையாகஎழுதிவிட்டு இவனைவிட எல்லாவிதத்திலும் எனக்கு ஏற்றவனை உன்னால்தேடித்தரமுடியாதென்று. அறியாமைதான் என்னசெய்வது அந்தவயது தான்எடுப்பதே சரியான முடிவென்று முடிவுகட்டும்பருவம் நாம்தான்பக்குவமாகஎடுத்துச்சொல்லிபுரியவைக்கவேண்டும் வேண்டும்.
கல்விக்கும் கலவிக்கும் ஒருபுள்ளிதான் வித்தியாசம்
இவர்கள் பள்ளிக்குச்சென்று கல்வியில்கால்வைக்கிறார்களா இல்லை முள்ளில் தடம்பதிக்கிறார்களாவென்று எந்தப்புள்ளிக்கென்று விழிப்போடு கவனிக்கவேண்டும்.
வல்ல இறைவன் அனைத்துசமூகத்தினரையும் காத்தருள்வானாக அம்மக்களுக்கு புரியும்தன்மையையும் விழிப்புணர்வையும் கொடுத்து வாழ்க்கையில் வெற்றிப்பாதைக்கு வழிவகுத்துக்கொடுப்பானாக ஆமீன்.
ஆசிரியர் டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ) அவர்களின் கட்டுரையின் அணுகுமுறையும் ஆக்கமும் மிகவும் சிறப்பாக இருக்கிறது விழிப்புணர்விற்கு இன்னுமோர் வித்திட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நமது மரியாதைகலந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் மப்ரூக் வ ஜஜாக்கல்லாஹ் ஹ்கைரன்.
"கருக்கலைப்புக்கொலைகள் குறையுமென்றால் கட்டுரை எவ்வளவு வேண்டுமானாலும் நீளலாம்"
மக்கி நூஹுத்தம்பி காக்கா அவர்களும் அதைத்தான் பகிர்ந்திருக்கிறார்கள்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross