Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM)[09 December 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38392
நகரில் பல உயிர்கள் புற்று நோயால் செத்து மடிய காரணமாக விளங்கும் இந்த இரசாயன ஆலைக்கு எதிரான KEPA வின் வழக்கு வெற்றி பெற வல்ல இறைவனிடம் பிராத்திப்போமாக..!
நாளைய நம் தலைமுறையினர்களை இந்த நச்சு ஆலையின் கோரபிடியில் இருந்து காக்க KEPA முயற்சி எடுத்திருப்பது குறித்து நமது நகர்மன்ற உறுப்பினர்களிடம் அவர் சாந்திருக்கும் ஜமாஅத் பெரியவர்கள் எடுத்துரைக்க வேண்டும்..! என்பது நகர்மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது..!
மேலும் நகராட்சியில் முறைகேடாக நச்சு ஆலைக்கு கட்டிட விரிவாக்கம் செய்துகொள்ள அனுமதி அளித்த நமது நகராட்சி மீதும் கட்டிட அனுமதிக்கு பல வழிகளிலும் முறைகேடுக்கு துணையாக இருந்து நகர்மன்ற கூட்டத்தில் நகர் மக்களுக்கு வெளிப்படுத்தாமல் மர்மமாக மறைமுகமாக அணைத்து தில்லுமுல்லு வேலைகளையும் செய்து கொடுத்த நகர்மன்ற அலுவலர்கள் மீதும் KEPA அமைப்பு விரைவில் வழக்கு தொடர்வது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது..! தவறினால் இன்னும் பல முறைகேடுகள் நமது நகர்மன்றத்தில் தொடரலாம்..!
ஒரு பக்கம் நச்சு ஆலைக்கு எதிராக நகர் மக்கள் போராடுகிறார்கள்..!
மறு பக்கம் நகர்மன்ற உறுப்பினர்கள் நச்சு ஆலைக்கு ஆதரவாகவும் ஆலைக்கு ஊக்கமளிக்கும் விதமாக நகர்மன்ற கூட்டத்தில் நடந்து கொள்கிறார்கள்..!
குறிப்பு:- நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வேதனைபடும் ஒரு குடும்பத்தை நகர்மன்ற உறுப்பினர்கள் ஒரு 5 நிமிடம் சந்தித்து அவர்களின் நிலைமையை கேட்டு அறிந்தால் அவர்களின் வேதனை என்ன வென்று இந்த நகர்மன்ற உறுப்பினர்களுக்கு புரியும்..!
இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் நகர்மன்ற கூட்டத்தில் ஆலைக்கு ஆதரவான நிலைபாட்டில் தன்னை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையலாம்..! இறைவன் இவர்களுக்கு நல்ல ஹிதாயத்தை வழங்கட்டும் ஆமின்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross