Re:மனம் வெந்து வேண்டுகிறேன்.! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[10 December 2014] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38394
கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களையும் அக்கறையுடன் அவதானிக்கும் சகோதரர் ஜியா அவர்கள் கவனம், கவனம் என்று தன் கரிசனத்தை கோடிட்டிறிக்கிறார்கள். நாம் சற்று அசந்து வேறு சில முக்கிய நடவடிக்கையில் மூழ்கி இருந்து இந்த ஆலையைபற்றிய நினைப்பதில் சிறுது கவனக் குறைவாக இருந்தாலும் "காயல்பட்டணம்.காம்". கண்கொத்திப்பாம்பு போல் படம் எடுத்து தினமும் சீறிக்கொண்டே தான் இருக்கிறது!.
எப்படி இருந்தாலும் அந்த நச்சு ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளின் நோயக்கிருமி தாக்கத்தால் நாம் எத்தனை, எத்தனை சொந்த பந்தங்களை இழந்துநிற்கிறோம், இன்னும் நம்மைவிட்டு பிரிய ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் புண்ணிய உயிர்கள் எத்தனை, எத்தனை அவ்வவளவு சொந்த பந்தங்களையும், உயிர் தோழர்களையும் இழந்து ஆனந்தமாக இருந்துவிடத்தான் நம்மால் முடியுமா?
அன்பு காயல் நெஞ்சங்களே, வரும் 30-ந்தேதி நடைபெற உள்ள அந்த நச்சு ஆலை முற்றுகை போராட்டத்தில் நமதூரின் ஒட்டுமொத்த அன்புள்ளங்களும் அணையுடைத்த வெள்ளமாய் திரண்டெழுந்து முற்றுகையிட வேண்டுமாய் நம்மை விட்டு பிரிந்த அந்த அத்தனை மர்ஹூமான காயல் சகோதர, சகோதரிகளின் சார்பாக மிக்க பணிவன்பாய் வேண்டுகிறேன்!
உன்கள் முற்றுகையிலிருந்து உதிரும் ஒவ்வொரு துளி வேர்வையும் வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு காயல் நோயாளிகளின் கண்ணீரை துடைக்க வழிகோலாக அமையும்.
இது ஊர் நலம் நாடும் பிரச்சனையாக சிறிதேனும் நகர்ந்து பார்க்கும் பிரச்சனை அல்ல. நம்வீட்டு பிரச்சனை, ஹம்திலில்லாஹ் இன்று நம் வீட்டில் அனைவர்களும் நலமாக இருக்கிறோம் நாளைக்கு அந்த நச்சு ஆலையின் கொடுமைத்தன்மை எந்த ரூபத்தில் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது அது தெரியாத காரணத்தால்தான் அநேக உயிர்களை இழந்து நிற்கிறோம்!.
ஆகவே கண்ணியமிகு காயல் சகோதரர்களே, இப்புண்ணிய முற்றுகைப் போரட்டதில் கலந்துகொள்ள உங்கள் மன உறுதியை இந்த நொடிமுதலே தயார் படித்திக்கொள்ளவும் வெளியூரிலும் வெளி மாநிலத்திலும் இருக்கும் காயல் சகோதரர்களே, டிசம்பர் 30-ந்தேதியில் பங்கெடுக்க உங்கள் புறப்பாட்டை தயார் படித்திக்கொள்ளவும்.
அயல் நாட்டிலிருக்கும் என்போன்றவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அந்த குடுப்பினை இல்லை. ஆகவே தான் அன்புடனும் அக்கறையுடனும் ஏன் உரிமையுடனும் உங்களை கெஞ்சிகேட்கிறேன். இப்புண்ணிய பணிக்கு என்னால் இயன்றது இந்த வேண்டுகோள் எழுத்துதவி மட்டுமே!
இந்த வேண்டுகோளை முற்றுகை போராட்டநாள் நெருங்கும் வேளையில் வைக்கலாம் என்றிருந்தேன் ,ஆனால் நேற்றைய கடலின் காட்சியில் கலர் மாறி வந்தாதால் கொதிப்பின் உச்சாணியிலிருந்து மனம் வெந்து வேண்டுகிறேன். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross