Re:...நபிகள் நாயகம் பிறப்பும் மதுக்கடை திறப்பும் posted bymackie noohuthambi (kayalpaattinam)[04 January 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38743
1436 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரே ஒரு இறை வசனம் ஒரே ஒரு நபி சொன்னார்கள் "மது இன்று முதல் தடை செய்யப்பட்டு விட்டது".
சொன்ன அடுத்த நிமிடமே மதுவை வாயில் வைத்திருந்தவர்கள் கீழே துப்பினார்கள். குடித்தவர்கள் வாந்தி எடுத்தார்கள். வீடுகளிலே இருந்த மது தெருக்களிலே ஆறாக ஓடியது.
இன்று எங்கும் எதிலும் மதுவில்லாத கொண்டாட்டங்கள் இல்லை. அதுவும் மக்கள் தேர்ந்தெடுத்த அரசே முன்னின்று மதுக் கடைகளை திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் புத்தாண்டு தின மது விற்பனை 165 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. ஆந்திராவில் 150 கோடி, தெலிங்கானாவில் 110 கோடி. தலைநகர் டில்லியில் எவ்வளவு, மற்ற மாநிலங்களில் எவ்வளவு என்று அறிக்கைகள் நமக்கு கிடைக்கவில்ல.
ஆங்கிலத்திலே TEMPTING - ATTEMPTING என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. 100 ரூபாய் நோட்டை மேஜையிலே வைத்தால் அதை களவு எடுக்க தூண்டுதல் தன்னிச்சையாக ஏற்படும் இதற்கு TEMPTING அதே 100 ரூபாய் நோட்டை மேஜை drawer உள்ளே வைத்து drawer பூட்டாமல் இருந்தால் அதை திறந்து அந்த திருட்டை செய்ய ஒரு முயற்சி மேற்கொள்ள வேண்டும் . அதற்கு ATTEMPTING . அதே போல் மது குடிப்பவர்கள் எங்கோ ஒளிந்து நின்று பயந்து பயந்து குடிப்பார்கள். அரசே அதை திறந்து விட்டு மக்களை குடிப்பதற்கு TEMPTING பண்ணி உற்சாகப் படுத்துகிறது.
ஒரு கண்துடைப்புக்காக நபி பிறந்த நாள் கிறிஸ்து பிறந்த நாள் காந்தி பிறந்த நாள் என்று குறிப்பிட்ட தினங்களில் மட்டும் மதுக் கடைகளை மூடுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது - ஏழைகளின் காதில் பூ சுற்றுவது. இப்படி செய்வதால் நபிக்கு மரியாதையும் கூடிப் போய் விடாது குடிகாரர்களுக்கு குடியும் முழுகிப் போய்விடாது. அவர்கள் என்றும் போல் அன்றும் குடிப்பதற்கு முன்கூட்டியே சரக்கு வாங்கி ஸ்டாக் வைத்திருப்பார்கள்.
அரசு என்று முழுமையாக இந்த டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடுகிறதோ அன்று தான் தமிழகத்துக்கு புதிய வருடம் நிம்மதியான வருடம். வாய்மையே வெல்லும் என்று எழுதி வைத்துக் கொண்டு அதன் கீழே வள்ளுவர் காந்தி படம் வைத்து அதன் பக்கத்திலே ஒரு பெரிய மேஜையிலே வகை வகையானா மதுவை அருந்திக் கொண்டிருக்கும் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் கொண்ட நாடு தமிழ்நாடு.
இது மற்ற மாநிலங்களை விட முதன்மையான முன்மாதிரியான நாடு. என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்வோம்.மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் கங்கையே சூதகமானால் எங்கே நீராடுவது - கங்கை புனிதமாக இன்னும் 200 ஆண்டுகள் கூட ஆகலாம் என்று ஒரு நீதிபதி பேசியது இங்கு குறிப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross