பொய் பிரசாரம். posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்)[06 January 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38759
ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகிவிடும் என்ற அபார நம்பிக்கை இவர்களுக்கு. இவர்களின் 25.10.2013 பிரசுரத்தை பார்த்தவர்களுக்கு புரியும்.
ஆற்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் பயோ கேஸ் திட்டம் பற்றிய செய்தி. இதே இணையதளத்தில் ஆற்காடு நகரமன்ற தலைவர் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆகியோரின் பேட்டி வெளியானது.
அதில் முக்கியமான கருத்துகள், "ஆற்காடு நகராட்சியில், குப்பைகளைக் கொட்டுமிடம் - பயோகேஸ் ப்ளான்ட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது... " (C&P)
"இந்த பயோகேஸ் திட்டத்தைச் செயல்படுத்திட தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகளுக்கு அரசால் அனுமதியளிக்கப்பட்டுள்ளபோதிலும், ஆற்காடு நகராட்சி மட்டுமே இத்திட்டத்தைத் துவக்கி, வெற்றிகரமாகச் செயல்படுத்தி, முன்னோடியாகத் திகழ்கிறது... " (C&P)
ஆற்காட்டில் குப்பை கொட்டுமிடம் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆனால், நமதூரில், 5 கி.மீ தாண்டினாலே அடுத்த ஊர். அந்த ஊரில் நமதூர் குப்பையை கொட்ட அனுமதிப்பார்களா?
அடுத்தது, பல நகராட்சிகளில் இந்த திட்டம் அமைக்க அனுமதிக்கப்பட்ட போதும், ஆற்காட்டில் மட்டும் தான் வெற்றிகரமாக செயல்படுத்துப்டுகிறது. ஆக, மற்ற நகராட்சிகளில் இந்த திட்டம் 'தோல்வி திட்டம்' என்பது அவரின் ஒப்புதல் பேட்டி.
அடுத்து, நில விலையேற்றம். இதே தகவல்தான் இவர்களின் முந்தைய பிரசுரத்திலும் இருந்தது. அப்போது, அவர்களிடம் நான், குப்பை கொட்டும் dump yard பக்கத்தின் நிலத்தின் விலை ஏறும் என்ற concept பற்றி கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை. இந்த பிரசுரம் உட்பட.
அடுத்தது, இந்த சாலை அமைப்பு மற்றும் மின் கம்பம் நடுதல். இதிலும் இவர்களின் அப்பட்டமான பொய். அந்த இடத்தை நேரில் சென்று பார்த்து அதன் தூரம் எவ்வளவு என்று ஆராய்ந்தவன் நான். இவர்களின் கூற்றி படி, "கடையக்குடி (கொம்புதுறை) யிலிருந்து பல கி.மீ. தூரத்தில் இருக்கிறதாம். இந்த அமைப்பிலிருந்து யாராவது ஒருவர் இந்த இடத்தை நேரில் பார்த்திருப்பார்களா?
ரூ. 5 லட்சத்தில் இந்த இடத்துக்கு அரை கி.மீ மட்டுமே சாலை அமைக்க (அதுவும் சரல் சாலை) ஆணையர் அனுமதி கோருகிறார். அதற்கான நிதி கூட, நகராட்சி நிதி இல்லை. "திடக்கழிவு மேலாண்மை திட்ட" த்திற்காக தமிழக அரசு ஒதுக்கிய நிதி.
அடுத்து, குப்பை கொட்டும் இடத்தை சுற்றி "Buffer Zone" அமைப்பது. இப்படி "Buffer Zone" அமைத்தால், பக்கத்து நிலத்துக்காரார்கள் எந்த கட்டிடமும் கட்ட தடை செய்தல். அப்படி ஒரு சூழல் வந்தால், பக்கத்து நிலத்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தில், தடை உத்தரவு (stay) வாங்குவார்கள். இந்த திட்டம் முடங்கி போகும் என்ற "ரொம்ப நல்லெண்ணம்". இவர்களின் இந்த சதி திட்டம் அறிந்து தான், அதற்கு நகரமன்ற உறுப்பினர்கள் அனுமதி வழங்கவில்லை.
சரி, இப்போது குப்பை கொட்டும் இடத்தை சுற்றி "Buffer Zone" இருக்கிறதா? என்றால் இல்லை. அப்போ, இந்த இடத்துக்கு மட்டும் "Buffer Zone" எதற்கு?
டிசம்பர் மாத கூட்டம் நடைபெற்ற (31-12-2014) ஆண்டு, L.F.Road பகுதியை சார்ந்த சமூக ஆர்வலரும் ஹாங்காங் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர், ஹாஜி. A.S.ஜமால் மாமா அவர்கள் தலைமையில் சிலர், நகர்மன்றத்துக்கு வந்து ஆணையரிடம், "தற்போது குப்பை கொட்டப்படும் இடத்தில், குப்பையை எரிக்கின்றனர். அதனால், சுவாச பிரச்சனை மற்றும் துர்நாற்றம் ஏற்படுகிறது. அந்த பகுதியில் வசிக்க முடியவில்லை. எனவே, அங்கு குப்பை கொட்ட தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இந்த அமைப்பினர், ஊரின் நடுவில் (பப்பரபள்ளி) குப்பை கொட்டி அனைவரும் பாதிக்கட்டும். ஆனால், ஊருக்கு ஒதுக்குபுறமான சர்வே எண் 278-ல் வரக்கூடாது. காரணம், அந்த இடத்தை நன்கொடையாக கொடுத்தது, இவர்கள் எதிர்க்கும் முஸ்லிம் ஐக்கிய பேரவை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஹாஜி வாவு SAR அவர்கள்.
மொத்தத்தில், இந்த இரு திட்டங்களும் சர்வே எண் 278-ல் வருவது உறுதி. அப்படி அங்கு வரவில்லையென்றால், அந்த நிதி, அரசுக்கு திரும்ப சென்று விடும். அப்படி அந்த நிதி அரசிடம் திரும்ப சென்றால், அதற்கு முழு காரணம் நகர்மன்ற தலைவியும் அவரை 'ஆட்டிவிகும்' சுயநல, 'பாசிச' கும்பல் மட்டுமே. 'மக்கள்(?) முதல்வர்' அறிவித்த இந்த திட்டம் சர்வே எண் 278-ல் வர, உண்மையான அதிமுக தொண்டர்கள் போராட வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross